India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா மராத்தான் போட்டியை இன்று காலை அமைச்சர் ஆவடி நாசர் கொடியாசித்து தொடங்கி வைத்தார். உடன், திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான, பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற, திருவள்ளூர் வீராங்கனைக்கு, அர்ஜுனா விருது கிடைத்துள்ளது. விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு மத்திய அரசு உயர் விருது பட்டியலை வெளியிட்டு உள்ளது. அந்த பட்டியலில், ஆசிய விளையாட்டு போட்டியில், பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற, திருவள்ளூரைச் சேர்ந்த மனிஷா இடம் பெற்றுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (04.01.2025) சுகாதார துறை சார்பில் 24 மணி நேர தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபு சங்கர் இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். உடன் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாதாந்திர மின்பராமரிப்பு காரணமாக ஹவுசிங் போர்டு, காக்களூர், வளாகம், பஸ் நிலையம், காமராஜபுரம், ராஜாஜிபுரம், எம்.ஜி.ஆர்.நகர், பட்டரை, அதிகத்தூர், கும்மிடிப்பூண்டி பஜார், தபால் தெரு, வேற்காடு. வி.எம்.தெரு, தேர்வழி, மா.பொ.சி நகர், சோழியம்பாக்கம், அப்பாவரம், ஆரம்பாக்கம், மாதர்பாக்கம் தண்டலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் எறையா மங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள சினேகிதரம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார் திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் அவர்கள். உடன் திருத்தணி எம்எல்ஏ சந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (ஜன.3) முதல் ஜன.8 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், இன்ரு திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் (டிச.3, 4) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று தென்தமிழக கடலோரப்பகுதி, மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
▶உண்ணிகளிடமிருந்து கடிபடாமல் இருப்பதுதான் முதல் தற்காப்பு. ▶தலையணை, படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். ▶வீட்டை சுற்றி புதார்கள் மண்டி இருந்தால், அதனை சுத்தம் செய்ய வேண்டும். ▶உண்ணிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம். ▶மலையேற்றத்துக்கு செல்லும்போது கொசு விரட்டி, உண்ணி விரட்டிகளை தேய்த்து கொள்ளுங்கள். ▶காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க
14 நாட்களில் காய்ச்சல், நடுக்கம், உடல் சோர்வு, உடல் வழி, இரும்பல் போன்றவை ஏற்படும். 2ஆவது வாரத்தில் நுரையீரல் தொற்று, நிமோனியா மற்றும் முளைக்கு தொற்று பரவி சுவாச செயலிழப்பு, கல்லீரலில் பாதிப்பு, மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும். கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயலிழந்து, மரணமடையும் வாய்ப்பு 30% வரை உள்ளது. இது பிரச்னைக்குரிய காய்ச்சல் என்பதை மக்கள் உணர வேண்டும். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.