India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்கள் வருகிற நவ.20 ஆம் தேதி வரை முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்கும் நபர்கள் mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்காக ரூ.3 லட்சம் இரண்டு தவணைகளாக அரசு மானியம் கடன் வழங்குகிறது. என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் நாளை வட்ட அளவில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. மேற்படி வட்ட அளவில் நடைபெறும் முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நவம்பர் 8 பணமதிப்பிழப்பு கருப்பு நாள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் வினோதமான நடவடிக்கை, பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்தது மட்டுமின்றி, முற்றிலும் தோல்வியையும் தழுவியது என தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கண்டிகை மற்றும் ஒதிக்காடு ஆகிய கிராமங்களில் இன்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த. பிரபுசங்கர் வேளாண் துறை சார்பில் வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மின்னணு பயிர் சாகுபடி மதிப்பீடு குறித்த ஆய்வு மேற்கொள்வதை பார்வையிட்டு பதிவேற்றம் செய்யும் விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர், மாணவர்கள் உடனிருந்தனர்.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக பொன்னேரியில் 25மி.மீ, செங்குன்றத்தில் 17மி.மீ, சோழவரத்தில் 16மி.மீ., ஜமீன் கெரட்டுர் 13 மி.மீ., கும்மிடிப்பூண்டி 12மி.மீ, திருவாலங்காடு மற்றும் பூந்தமல்லி 11 மி.மீ.மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூரில் நாளை நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களால் வரும் நவ.16ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நவ16 ஆம் தேதி காலை8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திருநின்றவூர் ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன என ஆட்சியர் தெரிவித்துள்ளார்,
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையம் அடுத்த கோங்கல்லில் பரவலாக மழை பெய்தது. தற்போது பெய்து வரும் மழையால் செடி, புதர்களில் கொசு மருந்து அடிக்காமல் டெங்கு கொசு உற்பத்தியாகி மக்கள் டெங்குகாய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.