Thiruvallur

News December 3, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 3, 2024

திருவள்ளூரில் 165 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 165 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்கள் மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News December 3, 2024

திருவள்ளூரில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

News December 2, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் 540 ஏரிகள் நிரம்பியது

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 581 நீர்ப்பாசன ஏரிகளில் 158 ஏரிகள் 100% நிரம்பியுள்ளது.106 ஏரிகள் 75% நிரம்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 3926 ஏரிகளில் 540 ஏரிகள் முழுவதுமாக நிரம்பி உள்ளது உள்ளது. 743 ஏரிகள் 75% நிரம்பி  உள்ளது. 160 ஏரிகள் 50% நிரம்பியுள்ளது. 757 ஏரிகள் 25% நிரம்பியுள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 2, 2024

திருவள்ளூரில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

ஃபெஞ்சல் புயல் மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையைகடந்த நிலையில், அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 1, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 1, 2024

திருவள்ளூர் அருகே வெள்ள அபாய எச்சரிக்கை 

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணி ஆற்றில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஆற்றில் நீர் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியிலிருந்து காலை 10 மணி அளவில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.இதனால் அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 30, 2024

மழைக்கால புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு எண்கள் 044- 27666746, 044- 27664177 எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் வாட்ஸ்அப் எண்கள் 9444317862, 9498901077 ஆகிய எண்களில் வாட்சப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

திருவள்ளூரில் அதி கனமழைக்கான எச்சரிக்கை

image

புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் விடியவிடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!