India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த தலமாகும். இங்கு பவுர்ணமி, அம்மாவாசை, பிரதோஷம், சிவ ராத்திரி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும், கோவில் குளத்தில் நீராடி தீர்த்தீஸ்வரரை தரிசனம் செய்தால் சகல தோஷமும் நீங்குவதோடு எடுத்த முயற்சி அனைத்தும் வெற்றி பெரும் என்பது ஐதீகம். நீங்களும் பயனடையுங்கள், தெரிந்தவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் தொடுகாடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி தனது மகன் கிருஷ்ணமூர்த்தி(27) கல்யாணம் ஆகியும் வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு தினம் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார் . இறந்த மகனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மருமகள் பாரதி (வயது 23) தந்த புகாரையடுத்து, மாமியாரை கைது செய்த போலீசார், தீவிரமான விசாரணையை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் பகுதியில் உள்ள திருப்பாச்சூரில் உள்ள கோயிலில் கைலாய வாத்தியம் வாசிக்கும் மூதாட்டியை கோவில் பூசாரி கன்னத்தில் அறைந்து தகாத வார்த்தைகளால் வசைபாடியுள்ளார். மேலும், மூதாட்டி மற்றும் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்ட நிலையில், அதனை எதிர்கொள்ள முடியாமல் கோவில் உள்ளே சென்று தாழிட்டுக்கொண்டார். இதனையடுத்து மூதாட்டி புகார் அளித்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் மார்ச் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம், நாளை (பிப்.28) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த குறைதீர் கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் விவசாய பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாகவும் நேரடியாகவும் தெரிவித்து பயன் பெறுங்கள் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கேட்டுக் கொண்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு வரும், 18 புறநகர் ரயில்கள் வருகின்ற பிப்.27ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, 3 நாட்களும் காலை 9.15 மணி முதல் பிற்பகல் 3.15 வரை இயங்கும் மின் ரயில்கள் இயங்காது. அதேநேரம், பொன்னேரி வரை 8 சிறப்பு ரயில்களும், மீஞ்சூர், எண்ணூர் வரை தலா 4 மின்ரயில்களும் இயங்கும்.
பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்திக்கு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த தாய் ஜெயந்தியை மப்பேடு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கிருஷ்ணமூர்த்திக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.
திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (27). இவர், தொழில் செய்வதற்காக தனது தாய் ஜெயந்தியிடம் தினமும் மது போதையில் வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 24ஆம் தேதி அவ்வாறு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டபோது, மகன் மீது தாய் ஜெயந்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடுகாடு கிராமத்தில், கிருஷ்ணமூர்த்தி (27) வேலைவாய்ப்பின்றி தாய் ஜெயந்தியிடம் தொடர்ந்து பணம் கேட்டு தகராறாக மிரட்டினார். பணம் தர முடியாது என்ற தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஜெயந்தி கிருஷ்ணமூர்த்திக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தார். காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மப்பேடு போலீசில் புகாரின் பேரில் ஜெயந்தி கைது செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.