India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடம்பத்தூர்- திருவாலங்காடு ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை.இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர்,நாலூர், மேட்டுப்பாளையம், கேசவபுரம், பத்மாவதி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது.மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால், சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து விவசாயப் பெருமக்களும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடதமிழக கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால், திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. கும்மிடிப்பூண்டி ,பொன்னேரி, மீஞ்சூர், பெரியபாளையம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும், இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் ?
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (டிச.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க.
வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூரில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை பெய்தது நேற்று. காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை திருத்தணி, ஊத்துக்கோட்டை தலா 7 மி.மீ. திருவள்ளூர் 5 மி.மீ . மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் சமூக வலைத்தள பக்கத்தில் சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேயப் பண்புகளின் விழாவான கிறிஸ்துமஸ் திருநாளில் அன்பைப் பரிமாறி மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.