India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டம் சென்னை சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை வரை செல்லும் மின்சார ரயில்களின் சேவைகள் புத்தாண்டை முன்னிட்டு நாளை 02.01.25 முதல் புதிய நேர அட்டவணை இன்று முதல்அமலுக்கு வருகிறது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் புதிய நேரப்படி மின்சார ரயில்கள் இயங்கும். இதேபோல் கடற்கரை செங்கல்பட்டு மின்சார ரயில்களின் நேரஅட்டவணையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, குரூப் 4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று பதிவு செய்யலாம். மேலும் அறிய 9789714244 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து 391 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கும்மிடிப்பூண்டி மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சிப்காட் பகுதி, மதர்பாக்கம் பைபாஸ், புதுப்பேட்டை, பாலயோகி நகர்,ஜி.ஆர்.கண்டிகை கும்மிடிப்பூண்டி பஜார் (ஜி.என்.டி. சாலை) ஏனாதிமேல்பாக்கம், தேர்வழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து 391 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் அறிவுறுத்தினார்.
ஆவடி பட்டாபிராம் இந்து கல்லூரியில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் புதுமைப் பெண் திட்டவிரிவாக்கம் தொடக்க விழாவில் சிறுபான்மையினர் (மற்றும்) வெளிநாடு வாழ்தமிழர்கள் நலன் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாணவியர்களுக்கு வங்கிபற்று அட்டையினை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பொன்னேரி நகராட்சியில் இன்று நகர்மன்ற கவுன்சிலர் கூட்டம், நகர மன்றத் தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில், பொன்னேரி நகராட்சி ஆணையர் எஸ்.கே புஷாரா நகராட்சி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, 12ஆவது வார்டு கவுன்சிலர்கள், தங்களுக்கு முறையாக பணிகளை ஒதுக்கவில்லை என்றும், வரவு செலவு கணக்குகள் முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், வெளிநடப்பு செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து அவ்வழியாக 2 மூட்டைகளுடன் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட 45 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் செங்குன்றத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து குட்கா வியாபாரி மைக்கேல் பவுன்ராஜ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பொன்னேரி அருகே ஏலியம்பேடு துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக,டவுன் பொன்னேரி, வெள்ளோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
Sorry, no posts matched your criteria.