India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இங்கு வந்து நினைப்பதை வேண்டினாள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. புராணத்தில் பெரிய வரலாற்றை கொண்டுள்ள இந்த அம்மனுக்கு ஆடி வெள்ளி மிக சிறப்புமிகு நாளாக கொண்டாடப்படுகிறது. அம்மனை வேண்டி வேப்பிள்ளை ஆடை அணிந்து சாமி தரிசனம் செய்தால், குடும்ப பிரச்சனை, குழந்தை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக நடத்திய கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் விஜயகுமார் கட்சியில் நீக்கப்பட்டார்.இதுகுறித்து பேசிய அவர், “நான் ஆதரவு தெரிவிக்கவில்லை.பாஜகவினர்கள்தான் என்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து போட வைத்தனர்” என்றார். மேலும், இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் விஜயகுமார் கட்சியில் நீக்கப்பட்டுள்ளார். மும்கொள்கைக்கு ஆதரவாக பாஜக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் விஜயகுமார் கையெழுத்திட்டார். அவரின் இச்செயல் கட்சி கொள்கைக்கு எதிராக இருப்பதால் அவரை கட்சியில் இருந்து அனைத்து அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த லிங்கை<
மும்பையைச் சேர்ந்த கோபிநாத் (25), டொயோட்டா இடியாஸ் காரில் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி நேற்று (மார்.6) சென்று கொண்டிருந்தார். அப்போது, புதூர் அருகே சென்றபோது எதிரே வந்த பொலிரோ கார் இவரது கார் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா மீது கொலை, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் திருவள்ளூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. மதுராமங்கலம் அருகே விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக மோகன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. புகாரின் பேரில், நேற்று (மார்.6) குணா போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கனகம்மாசத்திரம் அடுத்த புதூர் ரைஸ் மில் அருகே திருத்தணி நோக்கிச் சென்ற லோடு ஆட்டோவும், எதிரே வந்த காரும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், காரில் வந்த அரியான் கோபிநாத் (25) தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து, ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள்<
திருவள்ளூர் விவசாயிடம் மர்ம ஒருவர் நபர், சி.பி.ஐ. அதிகாரி எனக் கூறி பணம் கோரியுள்ளார்.இதனால் 71 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த விவசாயிக்கு பின்பு தான் நாம் மோசடி செய்யப்பட்டது அறிந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படியில் சைபர் குற்றவாளிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர் மேலும் அவர்களிடம் இருந்து 5.66 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.