Thiruvallur

News January 18, 2025

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

image

திருமுல்லைவாயல் தென்றல் நகரை சேர்ந்தவர் ஜெயபாரதி (45). பொங்கல் விழாவை கொண்டாட ஜெயபாரதி குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுள்ளார். வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த சுமார் 8½ பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

News January 18, 2025

ஆர்.கே.பேட்டை அருகே 32பேர் மீது வழக்கு பதிவு

image

ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ராஜா நகரம் வருவாய் கிராமம், நரசம்பேட்டை கிராமத்தை சார்ந்தவர் வினோத். இவருடைய தாயாருக்கு சொந்தமான சொத்து தொடர்பாக ஏற்கனவே வருவாய் கோட்டாட்சியத்தில் விசாரணை உள்ள நிலையில், அந்த இடத்தை அபகரிக்க வந்த 32பேர் மீது வழக்கறிஞர் வினோத் கொடுத்த புகாரில் அடிப்படையில், ஆர்கே பேட்டை போலீசார் வழக்கு பதிந்து வலை வீசி தேடி வருகின்றனர்.

News January 18, 2025

கடல் அலையில் சிக்கிய பள்ளி மாணவர் மாயம்

image

பொன்னேரி தாலுகாவில் அடங்கிய தீர்த்தங்கரைப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் சுரேஷ்குமார் . இவரது மகன் திலக்பிரசன்னா (16). நேற்று மாலை குடும்பத்துடன் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா வந்த நிலையில் லைட்ஹவுஸ் அருகே கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டார். பின்னர் தகவல் அறிந்த போலீசார் மீனவர்களின் உதவியுடன் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News January 17, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 17, 2025

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் வேலை வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவமனையில் மருத்துவ அலுவலர், செவிலிய பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இப்பணிக்கு இந்து மதத்தை சார்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிகள் குறித்து மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள இங்கே <>கிளிக் <<>>செய்யவும்.

News January 17, 2025

திருவள்ளூரில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் மற்றும் திருத்தணி துணை மின்நிலையங்களில் உட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கடம்பத்தூர், மணவூர், விடையூர், ஆட்டுப்பாக்கம், பெரியகளக்காட்டூர், திருத்தணி நகரம், அகூர், பொன்பாடி, மத்தூர், பெரியகடம்பூர், சின்னகடம்பூர், வெங்குபட்டு, மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க

News January 16, 2025

விவசாயியை தாக்கிய இருவர் கைது

image

திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் (40) இவர் நேற்று தனது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு பூனிமாங்காடு அருகே வந்த போது, லட்சுமணனின் உறவினர் அஜித் மற்றும் அவரது நண்பர் சூர்யா என்பருடன் சேர்ந்து லட்சுமணனை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த லட்சுமணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் அஜித், சூர்யா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 16, 2025

திருவள்ளூர் அருகே பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

image

பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தலைமறைவான அவரை போலீஸ் பல்வேறு வழக்குகளில் தேடி வந்தது. தமிழக-ஆந்திர எல்லையில் பதங்கி இருந்த பாம் சரவணனை திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வரும் போது போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்றுள்ளார். இதை அடுத்து காலில் சுட்டு போலீஸ் பிடித்ததனர்.

News January 15, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News January 15, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது

image

திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு, இன்று ஜன.15 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) ஆகியவைகளின் கீழ் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்களும் இயங்காது. மீறி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது பிரியர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!