India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்த்தில் உள்ள கிளாம்பாக்கம் புதிய துணை வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் இன்று திறந்து வைத்து விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் முதல்வரின் கவனத்தை ஈர்க்க தலைநகரில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (ஜன.23) நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும், ரூ.3000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ள தமிழக அரசின் நிலைப்பாட்டினை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருவள்ளூா் மாவட்ட மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், இன்று (ஜன.24) காலை 10 மணிக்கு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தோ்வு செய்ய இருக்கின்றனா். இதில், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் நாளை (ஜன.25) வட்ட அளவில், அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. இந்த குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான அனைத்து விண்ணப்பங்களையும் உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் சத்யவேடு கூட்டுச்சாலையில் லாரியை மடக்கி பணம் வசூலித்ததாக தலைமை காவலர் கோபிநாத் மீது புகார் எழுந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமை காவலர் கோபிநாத் உடன் ஊர் காவல் படையை சேர்ந்த சரவணனையும் சஸ்பெண்ட் செய்து திருவள்ளூர் எஸ்.பி ஆணை பிறப்பித்துள்ளார்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள பாலாபுரம் கிராமத்தில், கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகளை, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்; திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று (ஜன.22) நேரடியாக சென்று பார்வையிட்டு வீடுகள் தரமாக உள்ளதா? பாதுகாப்பாக உள்ளதா? என ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட திட்ட இயக்குநர் ஜெயக்குமார், பயிற்சி கலெக்டர் உடன் இருந்தனர்.
திருவள்ளூா் மாவட்ட மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், நாளை (ஜன.24) காலை 10 மணிக்கு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தோ்வு செய்ய இருக்கின்றனா். இதில், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம்.
பொதட்டூர்பேட்டையில் இயங்கிவரும் தனியார் பள்ளி வேன் நேற்று (ஜன.22) கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மாணவர்களை ஏற்றிக் கொண்டு பேட்டை கண்டிகை வழியாக சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்தது. அதில், 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். முகமது ரியாஸ் என்ற மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, போலீசார் வேன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடியில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.