India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.15 மணிக்கு திருவள்ளூர் புறப்படும் மின்சார ரயில் பராமரிப்புப் பணியால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கும், நள்ளிரவு 12.15 மணிக்கும் ஆவடி புறப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூரில் இருந்து இரவு 10.15 மணிக்கு ஆவடி புறப்படும் ரயிலும் ரத்து செய்யபட்டுள்ளன.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை ராக்கெட் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. GSLV – F15 ராக்கெட் நாளை காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பாதுகாப்பு நலன் கருதி திருவள்ளூர் – பழவேற்காடு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜன.28) மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், ஆர்.எம்.குப்பம், பாலாபுரம், திருத்தணி, ஊத்துக்கோட்டை, வீரமங்கலம், மாமண்டூர், வி.என்.கண்டிகை, பெருமாநல்லூர், பூனிமாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்
சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற 76-வது குடியரசு தின வரவேற்பு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்களால் முப்படைவீரர் கொடி நாள் நிதிவசூலில் 6.06 கோடி வசூல் செய்து தமிழ்நாட்டிலேயே இரண்டாம் இடம் பெற்றமைக்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அவர்களுக்கு சுழற்கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குஞ்சலம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால்ஊத்துக்கோட்டையில் உள்ள கச்சூர், கலவை, எஸ்.ஆர்.குப்பம், சீத்தஞ்சேரி, அம்மம்பாக்கம், குஞ்சலம், நெல்வாய், வெள்ளாத்துக்கோட்டை, அல்லிக்குழி, பிளேஸ்பாளையம், ஒதப்பை தொழிற்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
நாடு முழுதும் இன்று குடியரசு தினவிழா நடைபெறுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவள்ளுர் மாவட்ட ரயில் நடைமேடை, டிக்கெட் பரிசோதிக்கும் இடம், பயணியரின் உடைமை ஆகியவற்றை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். நடைமேடைகளில் ‘லக்கேஜ்’ உடன் வருவோர் மற்றும் பயணியர் கொண்டு வரும் ‘டிராவல் பேக்’ ஆக்கியவற்றையும், போலீசார் சோதனை செய்தனர். முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இங்கே <
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நாளை காலை 08.05 மணியளவில் கலெக்டர் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறேன். மேலும், காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, சுதந்திர போராட்டத் தியாகிகள் கௌரவிக்கப்பட உள்ளனர். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ள நிலையில், இந்த விழாவில் மக்கள் கலந்து கொள்ள கலெக்ட அழைப்பு விடுத்துள்ளனார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் இன்று (ஜன.25) வட்ட அளவில், அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. இந்த குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான அனைத்து விண்ணப்பங்களையும் உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் நாளை (ஜன.26) காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதிசெலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26ஆம் நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்படவும் உள்ளன.
Sorry, no posts matched your criteria.