Thiruvallur

News February 3, 2025

தடா நீர்வீழ்ச்சிக்கு சென்றபோது விபத்து: இளைஞர் பலி

image

பட்டாபிராமைச் சேர்ந்த ரித்திஷ் (21), நசரத்பேட்டையைச் சேர்ந்த திருமலை (20) ஆகியோர் நேற்று (பிப்.2) காலை ஆந்திராவில் உள்ள தடா நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் புறப்பட்டனர். வண்டலுார் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது, செங்குன்றம் அருகே ரித்திஷ், திருமலை சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இதில், ரித்திஷ் பரிதாபமாக உயிரிழந்தார். திருமலை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

News February 2, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 2, 2025

வல்லூர் சாலையில் லாரி மோதி இருவர் பலி

image

மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதி (35) மின் ஊழியர். இவரது அக்கா மகன் விமல் (15), மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் பைக்கில் வில்லிவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த போது மீஞ்சூர் அடுத்த வல்லூர் சாலையில் லாரி மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானர். இதுகுறித்து செங்குன்ற்றம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 2, 2025

சுப்ரமணிய சுவாமி கோயிலில் அலைகடலென பக்தர்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (பிப்.2) ஒரே நாளில் சுமார் 70 திருமணங்கள் நடைபெற்றது. இதனால், மலைக்கோயில் மக்கள் வெள்ளத்தில் திருக்கோயில் நிறைந்திருந்தது. இந்த மாதத்தில் திருமணம் செய்தால் நல்லது என்று சாஸ்திரங்களால் சொல்லப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால், நிறைய பேர் இந்த சுபமுகூர்த்தத்தில் திருமணத்தை நடத்தினர்.

News February 2, 2025

தெருக்கூத்து போட்டியில் அசத்திய மாணவர்களுக்கு பரிசு

image

பள்ளிக் கல்வித்துறை, அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா நடத்தி வருகிறது. அந்த வகையில், இரு மாதங்களாக நடந்த போட்டிகளில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து 298 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், திருத்தணி, கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், தெருக்கூத்து போட்டியில் மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்தனர். அவர்களுக்கு நேற்று (பிப்.1) திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன் நினைவு பரிசு வழங்கினார்.

News February 2, 2025

மீஞ்சூர் அருகே கணவன் – மனைவி தற்கொலை

image

மீஞ்சூர் அருகே உள்ள புங்கம்பேடு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலு (62). பார்வை குறைபாடு உள்ள இவர் தனது மனைவி உமாவுடன் (55) வசித்து வந்தார். இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக இருவரையும் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால், மன உளைச்சலுக்கு ஆளான இருவரும் நேற்று முன்தினம் (ஜன.31) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். உடல்களை கைப்பற்றிய மீஞ்சூர் போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 2, 2025

கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளர் பலி

image

பஞ்செட்டி, நெடுவரம்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் பிரபாகரன் (38). புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் உள்ள இரும்பு உருக்கு தொழிற்சாலையில், மிஷின் ஆப்பரேட்டராக வேலை பார்த்தார். நேற்று (பிப்.1) பணியில் இருந்த அவர், நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டின் குறுக்கே கடக்க முயன்றபோது கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 2, 2025

ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் ஆய்வு 

image

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் இன்று (01.02.2025) திருவள்ளூர் ஆயுதப்படை குடியிருப்பு பகுதி மற்றும் தமிழ்நாடு காவலர் மலிவு விலை அங்காடி பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர்களிடையே நிறை மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.

News February 1, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 1, 2025

விவசாயிகளுக்கான கடன் வரம்பு உயர்வுக்கு நன்றி தெரிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் வை.வேணுகோபால் தற்போது மத்திய அரசு 2025-26ஆம் வருடத்திற்கான பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு உச்ச வரம்பை உயர்த்தியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஏற்கனவே 3 லட்சம் தான் இருந்தது. தற்போது கூடுதலாக 2 லட்சத்தை உயர்த்தி 5 லட்சமாக வழங்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு சங்கம் சார்பில் நன்றி தெரிவித்தார்.

error: Content is protected !!