India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அதேப் பகுதியியைச் சேர்ந்த சஞ்சயை கடந்த 10 மாதங்களாக காதலித்து வந்தார். சஞ்சய், ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதேபோல், மற்றோரு பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்த ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த பாலாஜியும் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்மாவட்ட காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் கல்வி உதவித்தொகை மோசடி ஆன்லைன் மோசடிகாரர்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வந்துருக்கிறது. அந்த பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்க்கு அனுப்பவதாக கூறி Account Number, OTP, QR Code- கேட்டு அழைப்பு வந்தால் அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதவரத்தில் உள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (பிப்.8) நடைபெறுகிறது. 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 20,000+ காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்தவர் க.சுந்தரம். இவர், கடந்த திமுக அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர். இவரது மனைவி எழிலினி சுந்தரம், நேற்று வெள்ளிக்கிழமை (பிப்.7) மாலை 6 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சுந்தர் கடந்தாண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிகத்தூர் முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஜெகதீசனை 3க்கும் மேற்பட்டோர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு, ஜெகதீசனை 3க்கும் மேற்பட்டோர் அரிவாளால் தலையில் பலமாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தலைமையில் மாவட்ட திறன் பயிற்சி துறை சார்பில் நான் முதல்வன் (Finishing School) திட்டம் மூலம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகிய கால திறன் பயிற்சி அளித்தல் தொடர்பாக துறை அலுவலர்களிடம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் இணையவழி மோசடிகள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் இலவச தொலைபேசி மூலமோ அல்லது இணைதளம் மூலமோ புகார் அளிக்கலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இணையவழி மோசடிகள் குறித்த புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் 1930 அல்லது இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்” என்றார். ஷேர் செய்யுங்கள்
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள 411 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு <
ஆந்திர மாநிலம் தடுக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முரளி (27). பூந்தமல்லியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்த இவர், நேற்று முன்தினம் (பிப்.5) இரவு பணி முடிந்து வழக்கம் போல் தனது பைக்கில் பூந்தமல்லியில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டரைப்பெருமந்தூர் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.