India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
திருத்தணியில் முருகனின் ஐந்தாம் படை வீடு உள்ளது. இங்கு தரிசனம் செய்வதற்காக, தைப்பூசமான நேற்று (பிப்.11) காஞ்சிபுரத்திலிருந்து பாபு என்பவர் தனது மகனுடன் வந்துள்ளார். பேருந்தில் இருந்து இறங்கி கோயிலுக்கு செல்லும் வழியில், திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். உடனே, அவரை திருத்தணி அரசுமருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 18 – 35 வயது வரை இருக்கலாம். 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை முடித்திருக்க வேண்டும். DMLT சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மாதம் ரு.15,000 சம்பளம் வழங்கப்படும். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். <
திருவள்ளூர் மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோரின் நலனுக்காக தமிழக அரசு அவர்களுக்கு வங்கி கடன் மற்றும் சுய தொழிலுக்கான பயிற்சிகள் அளித்து வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. பணியாளர்களுக்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி, திறன், எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை செய்து தேர்வு செய்யப்படுவார்கள்.<
புளியந்தோப்பபைச் சேர்ந்தவர் மகிமைதாஸ் (68). உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற, நேற்று காலை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் வந்தார். அப்போது, தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது, விரைவு ரயில் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் இன்ஜினின் கீழ் பகுதியில் சிக்கிக் கொண்டது. இதனால் திருவள்ளூர் – சென்ட்ரல் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
திருத்தணி ஒன்றியம், தெக்களூர் சேர்ந்தவர் வாஞ்சிநாதன். அதே பகுதியைச் சேர்ந்த கவிதா. இருவரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி, 10 நாட்களுக்கு முன் திருமணம் செய்துக் கொண்டு அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கவிதாவை பெற்றோர் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கவிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்துகொண்டுள்ளார்.
மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் <
மணலி புதுநகரில் 4 நாட்கள் வேலைக்கு வராததால், ஊழியர்களை மேலாளர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் மேலாளரை சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டெய்னர் பெட்டக மேலாளரான சாய் பிரசாத்தை, மது போதையில் சுத்தியால் தாக்கிவிட்டு 2 இளைஞர்கள் தப்பி ஒட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.