Thiruvallur

News February 14, 2025

அதிமுக வட்டச் செயலாளர் தூக்கிட்டு தற்கொலை

image

புழல் காவாங்கரை பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் சபாபதி (47). அதிமுக வட்டச் செயலாளரான இவர், நேற்று மாலை தனது வீட்டில் உள்ள படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதை கவனித்த அவரது மனைவி, அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சென்னை மாவட்டத்தில் மட்டும் 33 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க <<>>வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நியமனம்

image

திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.எஸ். கோவிந்தராஜனை, கட்சி தலைமை அந்த பதவியில் இருந்து விடுவித்தது. அவருக்கு பதிலாக எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் என்பவரை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக பொதுச் செயலாளர் துறை முருகன் நேற்று (பிப்.13) அறிவித்துள்ளார். புதிய பொறுப்பாளருக்கு மற்ற நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

News February 13, 2025

கிழக்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் நியமனம்

image

திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளராக பணியாற்றி வந்த சட்ட மன்ற உறுப்பினர் டி.ஜெ.எஸ். கோவிந்தராஜனை அந்த பதவியில் இருந்து விடுவித்தது அவருக்கு பதிலாக எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் என்பவரை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக திமுக கட்சியின் பொது செயலாளர் துறை முருகன் இன்று (பிப்.13) அறிவித்துள்ளார்.புதிய பொறுப்பாளருக்கு மற்ற நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு அறிவிப்பு.

News February 13, 2025

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை, “தெரியாத வங்கி கணக்கிலிருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் கிரெடிட் செய்யப்பட்டிருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிற்கு நேரில் சென்று புகார் அளிக்கவும். சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். அவ்வாறு பெறப்பட்ட பணத்தை பயன்படுத்தினாலோ தங்கள் வங்கி கணக்கில் வைத்து கொண்டாலோ தாங்களே சைபர் கிரைம் குற்றவாளியாக கருத்தப்படுவீர்கள்” எனத் தெரிவித்துள்ளது.

News February 13, 2025

திருவள்ளூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில், மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் நில உடமை மற்றும் சுய விபரங்களை தங்களது கிராமங்களில் தரவு சேகரிக்கும் முகாம்கள் நடைபெறும் நாட்களில் நில ஆவணம், ஆதார் மற்றும் இதர ஆவணங்களுடன் பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

பறிமுதல் வாகனங்கள் வரும் 18ஆம் தேதி பொது ஏலம்

image

திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையினரால் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கரம் என 47 வாகனங்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. உரிமை கோரப்படாத வாகனங்கள் வரும் 18ஆம் தேதி, திருவள்ளூர் குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

25 புறநகர் ரயில்கள் ரத்து

image

பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால், இன்று (பிப்.13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே இயங்கும் 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் – பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்.

News February 13, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!