India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணிணி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும்.<
ஏடூர் கிராமத்தில் மூன்று நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி, 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கூலித்தொழிலாளி சுரேஷ் (46) உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யாததால், கிராமவாசிகள் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காய்ச்சல் பரவி வரும் நிலையில் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
அகூர் கிராமத்தை சார்ந்த வெங்கடேசன் (61) இவர் வீட்டின் அருகே உள்ள முருங்கை மரத்தில் கீரை மற்றும் முருங்கைக்காய் அறுக்க மரத்தில் ஏறி உள்ளார். அப்பொழுது கிளை உடைந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபாடி, கையுந்துப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகள் 03.04.2025 முதல் 05.04.2025 வரை நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு 7401703482, 8072908634 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வீரராகவப் பெருமாள் கோயில். வைத்திய வீரராகவர் என்ற பெயரில் பெருமாள் அழைக்கப்படுகிறார். இங்குள்ள ஹிருதாபநாசினி தீர்த்தத்தில் நீராடினால் எண்ணத்தால் உருவான பாவங்கள் மற்றும் தீராத நோய் தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிவபெருமான் தனது தோஷம் நீங்க இத்தல பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றதாக தல வரலாறு உள்ளது. ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 4 மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதன்படி, திருவள்ளூர், கடம்பத்தூர் -காக்கனூர் நடுநிலைப்பள்ளி, பூந்தமல்லி, வில்லிவாக்கம் -ஆவடி S.A பொறியியல் கல்லூரி, R.K பேட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு- அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் கோஜன் பொறியியல் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் விழாவை முன்னிட்டு மாவட்ட விளையாட்டரங்கில் வரும் ஏப்.6 அன்று காலை 6 மணிக்கு மாராத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில், 16-36 வயதுடையோர் கலந்துகொள்ளலாம். போட்டியில், முதலில் வரும் ஐந்து ஆண்கள் & பெண்களுக்கு தலா ரூ.10000 வழங்கப்படும். <
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 526 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குளம் அமைக்க ரூ.42,60,60000 ஒதுக்கப்பட்டது. தற்போது, மாவட்டம் முழுவதும் பணி முடிந்த நிலையில், 95% ஊராட்சிகளில் பணி அறைகுறையாகவே நடந்துள்ளது. குளம் வெட்ட சொன்னால் குழந்தைகள் விளையாட பள்ளம் வெட்டியது போல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ரூ.42 கோடி வீணாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கவனத்திற்கு குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. என அறிவித்திருக்கின்றனர்.
திருவள்ளூர், சோழவரம் அருகே உள்ள எருமைவெட்டிபாளையம் கிராமத்தில் வரமூர்த்திஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சியளிக்கிறார். ஆதலால் இங்குள்ள இறைவனை வணங்கினால் திருமணம் உள்ளிட்ட அனைத்து தடைகளும் நீங்கும். இங்கே வரும் பக்தர்கள் ஊற்றெடுக்கும் கங்கை நீரை அருந்தி, கிருஷண அரச மரத்தை சுற்றி வந்த பின் சிவனை வணங்கினால், பித்ரு தோஷம் நீங்கும். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.