Thiruvallur

News February 20, 2025

பொன்னியம்மன் உண்டியல் மூன்றாவது முறையாக திருட்டு

image

திருவள்ளூர் பெரியபாளையம் அடுத்த தண்டலம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இக்கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடி செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது.இதனை அடுத்து கிராம மக்கள் சார்பில் செல்லியம்மன் கோயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர்.நேற்று நள்ளிரவில் பொன்னியம்மன் கோவில்  உண்டியல் காணிக்கை மீண்டும் திருட்டு

News February 20, 2025

பஸ் படிக்கட்டில் தவறி விழுந்த மூதாட்டி பலி

image

செவ்வாய்பேட்டையில் வசித்து வந்தவர் ராணியம்மாள் 62. நேற்று மதியம் தனியார் பஸ் மூலம் பெரியபாளையம் சென்றார். அங்கு பஸ்ஸிலிருந்து கீழே இறங்கும்போது படிக்கட்டில் கால் தவறி விழுந்து காயம் அடைந்தார். சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 20, 2025

லாரி மீது தனியார் கம்பெனி பேருந்து மோதல்: 6 பேர் காயம்

image

பூந்தமல்லி அடுத்த புதுச்சத்திரம் ஆஞ்சநேயர் கோயில் அருகே நேற்று (பிப்.19) காலை லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், தனியார் பேருந்து ஓட்டுநர் உள்பட 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.

News February 20, 2025

அஞ்சல் துறையில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சென்னை மாவட்டத்தில் மட்டும் 33 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க <<>>வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 20, 2025

உடனே பணியில் சேர கலெக்டர் எச்சரிக்கை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய பணியிடத்தில் உடனடியாக சேர வேண்டும் என்றும் காலதாமதம் செய்தால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் மு.பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட வருவாய் அலகில் வட்டாட்சியர் பணி அமைப்பில் நிர்வாக நலன் கருதி நேற்று முன்தினம் (பிப்.18) மாறுதல்கள் மற்றும் நியமனம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

News February 19, 2025

7 ம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

பொன்னேரி அடுத்த அகரம் கிராமத்தைசேர்ந்தவர்கள் ரம்யா ராஜசேகர்,இவர்களது மகள் தமிழ் செல்வி (12) இவர்அருகில் உள்ள பள்ளிபாளையம் நடுநிலைப் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று (பிப்.18) மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் தூக்கு மாட்டியுள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்று பரிசோதித்ததில் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை.

News February 19, 2025

குடிபோதையில் படுத்து தூங்கியவர் இறப்பு

image

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் சமிரான் (56) இவர் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் குடிபோதையில் பொன்னேரி குண்ண மஞ்சேரி சாலை அருகில் படுத்து தூங்கியவரை எழுப்பியபோது இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து பொன்னேரி காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் உடனே கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News February 19, 2025

மனதால் நினைக்கும் பாவத்தை கூட போக்கும் வீரராகவர் கோவில்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைத்திருக்கும் அருள்மிகு வீரராகவர் கோவிலின் மூலவராக வீரராகவ பெருமாள் இருக்கிறார். இங்கு மூலவருக்கு சந்தன தைலத்தால் மட்டுமே அபிஷகம் நடைபெறும். இத்தலத்தின் ஹிருதபதணி தீர்த்தம் கங்கையை விட புனிதமானது. இந்த குளத்த்தில் குளித்தல் மனதால் நினைக்கும் பாவங்கள் கூட விலகும் என்பது நம்பிக்கை. எங்கேனும் புனித பயணம் மேற்கொள்ள நினைப்பவர்கள் ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்

News February 19, 2025

வாகனங்கள் அடுத்தடுத்து ஏறியதில் முற்றிலும் சிதைந்த உடல்

image

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில், நேற்று (பிப்.18) ஆண் ஒருவர் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சாலையில் அவரது உடல் இருப்பது தெரியாமல், அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி இறங்கியதில் அவரது உடல் முற்றிலும் சிதைந்துபோனது. ஆரம்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 19, 2025

பேருந்து – கனரக வாகனம் மோதி விபத்து 

image

பூந்தமல்லி அடுத்த புதுச்சத்திரம் ஆஞ்சநேயர் கோயில் அருகே இன்று (பிப்.19) காலை கனரக வாகனமும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், தனியார் பேருந்து ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தினால் அந்தப் பகுதியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.

error: Content is protected !!