Thiruvallur

News October 7, 2024

திருவள்ளூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.7) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், வெளியே செல்லும் மக்கள் குடை எடுத்துச் செல்லுங்கள்

News October 6, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 6, 2024

பூந்தமல்லி அருகே இளைஞர் தற்கொலை

image

பூவிருந்தவல்லி அருகே ஆன்லைன் ட்ரேடிங்கில் ரூ.1 கோடி வரை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னீர் குப்பம் பகுதியைச் சேர்ந்த எல்.ஐ.சி. ஏஜெண்ட் வினோத், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் ட்ரேடிங்கில் முதலீடு செய்துள்ளார். தொடர் நஷ்டத்தால் கடன் சுமை அதிகமாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News October 6, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் கழிவு நீர் லாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகராட்சி பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் கழிவு நீரை லாரிகள் மூலம் கொண்டு வந்து அதை ஆற்றுப்பகுதியில் விடுவதாக தொடர்ந்து புகார் வருகிறது. இதனால் ஆறு மாசடைகிறது, எனவே இது போன்ற சம்பவங்கள் கண்டறியப்பட்டால் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 6, 2024

ஆந்திராவிற்கு சுற்றுலா சென்ற நண்பர்கள் லாரி மோதி பலி

image

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்(22) மற்றும் அவரது பெண் தோழியான ஆணி மோள் இருவரும் தங்களது நண்பர்கள் 10 பேருடன் தனித்தனியே இருசக்கர வாகனத்தில் ஆந்திர மாநிலம் தடா பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, புதுவாயல் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதது விதமாக லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில், சந்தோஷ் மற்றும் அவரது தோழி ஆணி மோள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News October 5, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 5, 2024

திருவள்ளூரில் இரவு 7 மணி வரை வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

News October 5, 2024

நடிகைக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்கள் கைது

image

மதுரவாயலில் நடிகை சோனா வீட்டில் சுவர் ஏறி குதித்து கத்தியை காட்டி மிரட்டிய புகாரில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு மதுரவாயலைச் சேர்ந்த லோகேஷ், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நடிகை சோனா வீட்டில் திருடும் நோக்கில் சுவர் ஏறி குதித்தனரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 5, 2024

இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக (அக்.5) இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை செய்யப்பட உள்ளது. பொன்னேரி, வெள்ளோடை, எலியம்பேடு, மஹிந்திரா நகரம், கனகம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். செங்குன்றம், ஜே.ஜே.நகர்,. திருத்தணி நகரம், அகூர், பொன்பாடி, மத்தூர், முருக்கம்பட்டு, பெரியகடம்பூர், சின்னகடம்பூர், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும்.

News October 5, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் 9ஆம் தேதி துணை முதல்வர் ஆய்வு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 9ஆம் தேதி ஆய்வு செய்ய இருக்கிறார். மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள திட்டங்கள் , பொதுமக்களின் பயன்கள் இவற்றை குறித்து ஆய்வு செய்ய உள்ளார். மேலும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் , வழங்கப்படும் சலுகைகள் கல்வி தரம் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.