Thiruvallur

News March 15, 2025

லாரி – தொழிற்சாலை பேருந்து மோதி விபத்து: 14 பேர் காயம்

image

மப்பேடு சமத்துவபுரம் பகுதியில், கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தொழிற்சாலையில் பணி முடித்த திருத்தணி ஊழியர்கள் தொழிற்சாலை பேருந்தில், சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தனர். கனகம்மாசத்திரம் அடுத்த ஆற்காடுகுப்பம் அருகே சென்றபோது, லாரி பேருந்து மீது மோதியது. இதில் 12 தொழிலாளர்கள் காயமடைந்தனர். லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார்.

News March 15, 2025

மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு வேலை

image

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளதால், மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60,000, நர்சுகளுக்கு ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 15, 2025

இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 15, 16) வெப்பம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டை நெருங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக் கட்டணம் ஆகியன வசூலிக்கும் பொருட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. கிராம மக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி வரியினங்களை செலுத்தி ஊராட்சியின் வளர்ச்சிக்கு துணை புரியுமாறு ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

திருத்தணி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

image

திருத்தணி அரசு மருத்துவமனையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. மகப்பேறு பிரிவு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த வார்டில் இருந்த 11 பெண்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. திருத்தணி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க விரைந்து வந்து தீயை அனைதனர்.

News March 14, 2025

ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க கலெக்டர் உத்தரவு

image

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், ஆவின் பால் உற்பத்தி அதிகரிப்பு தொடர்பாக பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்களுடன் கலந்துரையாடல் நேற்று (மார்.13) நடைபெற்றது. இதற்கு, கலெக்டர் பிரதாப் தலைமை தாங்கினார். அப்போது, ஆவின் நிறுவனத்திற்கு முறையாக பாலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், தரம் குறைவான பாலை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

News March 14, 2025

வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்: கலெக்டர்

image

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமையில், மது கடத்தல் மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று (மார்.13) நடந்தது. இதில், வாகன சோதனையை தீவிரப்படுத்தவும், சந்து கடைகள் மற்றும் கல்வி மையங்களில் ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். மேலும், குற்றச்சம்பங்களில் ஈடுபடும் வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிட்டார். கலால், வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News March 14, 2025

பள்ளிப்பட்டு அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

image

பள்ளிப்பட்டு அடுத்த டி.வி.கண்டிகையைச் சேர்ந்தவர் விநாயகம் (44). இவர், பள்ளிப்பட்டு துணைமின் நிலையத்தில் கம்பியாளராக பணியாற்றி வந்தார். நேற்று (மார்.13) காலை பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம் எதிரே உள்ள வீட்டு மின் இணைப்பில் பழுது பார்க்க, அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை துண்டிக்க முற்பட்டார். அப்போது உயர் மின்னழுத்த கம்பி அவர் மீது உரசியதில் உடல் கருகி கீழே விழுந்து பலியானார்.

News March 14, 2025

மனைவியை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

image

ஆவடியைச் சேர்ந்த சரிதா, மேம்பாக்கத்தைச் சேர்ந்த மதன் (39) என்பவரை 2ஆவதாக காதலித்து கடந்த 2019ஆம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார். குடும்ப பிரச்னை காரணமாக 2021ஆம் ஆண்டு ஜன.21ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, மதன் இரும்பு குழாயால் சரிதாவை சரமாரியாக அடித்துக் கொன்றார். வழக்கை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்றம், மதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

News March 13, 2025

3 மாதத்தில் பிரச்னைகள் தீர்க்கும் கோயில்

image

திருவள்ளூர் மாவட்டம் , திருப்பாசூர் கிராமத்தில் அமைந்துள்ளது வாசீஸ்வர சுவாமி கோயில். இது, அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்ட சிறப்பினைக் கொண்ட கோயில். 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் இரண்டாம் கரிகால சோழனால் கட்டப்பட்டது. 11 விநாயகர்கள் எழுந்தருளியிருக்கும், விநாயகர் சபை ஒன்றும் உள்ளது. விநாயகரை வழிபட்டால் அனைத்து பிரச்னைகளும் மூன்று மாதத்தில் தீரும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!