India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆவடி அருகே மோரையில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் குணமடைந்தார். இவருக்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டு, வீடு கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. இப்பணியை ஆவடி தொகுதி எம்எல்ஏ சா.மு.நாசர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆவடி காவல் ஆணையரகப் பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை 16 இடங்களில் போக்குவரத்து பிரிவு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாதது, 3 பேர் பயணிப்பது, போக்குவரத்து விதிமுறைகள் மீறல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு அடுத்த பொம்மராஜபேட்டையில் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதில், அர்ச்சுனன் வில் வளைப்பு, திரவுபதியம்மன் திருக்கல்யாணம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடந்து வருகின்றன. திருவிழாவின் 18ம் நாளான நேற்று முன்தினம் காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட நெசவாளர்கள் இலவச வேட்டி சேலைக்காக கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்க திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் அவர்களிடம் மனு அளித்தனர். மேலும் இந்த நிகழ்வில் பொதட்டூர்பேட்டை பேரூர் செயலாளர் பாபு, பிரதிநிதி சஞ்சய் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.
ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட ஆவடி, செங்குன்றம் காவல் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை நடைபெற்ற ரவுடி வேட்டையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் தொடர்புடைய 130 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது குறித்து காவல் ஆணையர் கி.சங்கர் கூறியதாவது, ரவுடிகள் மீதான கடும் நடவடிக்கைகள் தொடரும் என்றார்.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பேருந்து நிலையம் அருகில் இன்று திருவள்ளூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் ஏற்பாட்டில் பொதுமக்களின் தாகத்தை தணிக்க நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, ஆரஞ்சு, மோர் உட்பட பல்வேறு உணவுப்பொருட்களை ஆவடி எம்எல்ஏ நாசர் வழங்கினார்.
மாதவரம் தபால் பெட்டி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மதியம் சைக்கிளில் வந்த முதியவர் ஒருவர் கோடை வெப்பம் தாளாமல் திடீரென சுருண்டு விழுந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு சாலையோரம் கொண்டு வந்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாதவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
திருவள்ளூர், திருத்தணியில் நேற்று (ஏப்.29) 104.18 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.
மாதவரம் பால்பண்ணை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ மூன்றாவது தெருவில் நேற்று மதியம் மதுபோதையில் வந்த 8-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அப்பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை கல்லால் அடித்து பொதுமக்களை அச்சுறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.