India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஹம்மது நபில். 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இவர் இன்று காலை ஆவடியில் உள்ள கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பம் வாங்க எண்ணூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது ரயிலில் ஏற முயன்ற ஹம்மது நபில் எதிர்பாராதவிதமாக ரயிலிலிருந்து தவறி விழுந்து தலையில் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தங்கி பணியாற்றிவந்தவர் பிரஜேஸ் யாதவ் (33). இவரது சொந்த ஊர் பீகார். இந்நிலையில் நேற்றிரவு பிரஜேஸ் யாதவ் மதுபோதையில் கம்பெனியில் உள்ள மின்சார பெட்டியில் கைவைத்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
திருத்தணி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது புராதன திரவுபதி அம்மன் திருக்கோவில். இந்த கோவிலின் தீமிதி திருவிழா நேற்று மாலை நடந்தது. இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். திருவிழாவை ஒட்டி கோவில் வளாகம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருத்தணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருத்தணி திருக்குளம் அருகே உள்ள டீக்கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருத்தணி போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதைடுத்து திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரவணன் என்பவரின் டீக்கடையில் ஆய்வுசெய்தனர். அந்த கடையில் ஒரு கிலோ அளவிலான கஞ்சா விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. கஞ்சாவை பறிமுதல்செய்த போலீசார் சரவணனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருத்தணியில் கமலா திரையரங்கம் அருகில் இன்று அதிமுக கழகப் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 70ஆவது பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் முன்னாள் எம்பி ஹரி அவர்கள். இந்த நிகழ்வில் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் தீயணைப்பு நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நீர்மோர் தண்ணீர் பந்தலை நடிகர் தாடி பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி மற்றும் பழங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய், தாடி பாலாஜிக்கு நீண்ட காலம் நெருங்கிய குடும்ப நண்பர் எனவும் நட்பு ரீதியாகவே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் நடிகர் தாடி பாலாஜி கூறினார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு காவல் நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் கடந்த இரு தினங்களுக்கு முன் நிர்வாண நிலையில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வண்புனர்வு செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பாதிரிவேடு போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சூர்யா, சுவேந்தர், ஜெபகுமார் ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர்.
பள்ளிப்பட்டு வட்டம் மேலப்பூடி ஊராட்சியில் உள்ள சொரக்காய்ப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த நெசவாளர் வெங்கடேசன்-செல்வி தம்பதியர் இன்று பசுமாட்டிற்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் இப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நெசவாளர் வெங்கடேசன் கூறுகையில், “எனது நீண்ட நாள் ஆசை, எங்கள் வீட்டில் கன்றுக் குட்டியாக இருந்து வளர்த்து வந்த பசுவிற்கு வளைகாப்பு நடத்த ஆசைப்பட்டேன் என்றார்.
ஆந்திர மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆந்திர மாநில எல்லையில் வாகன சோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளது . வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த செயலில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எல்லையோர டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஆந்திர மாநில முழுவதும் மது கடைகள் மூடப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.