Thiruvallur

News January 5, 2026

மாணவர்களுக்கு பயிற்சிப்பட்டறை நடத்தும் எம்பி

image

தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி?
என்ற பயிற்சிப்பட்டறை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் மாணவர்களுக்கு வரும் 25 ஆம் தேதி நடத்த உள்ளார். இதற்குமுன் பதிவு செய்வதற்காக மேல் உள்ள க்யூ ஆர் யை ஸ்கேன் செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள: 9445500346 என்ற தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2026

திருவள்ளூர்: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

திருவள்ளூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இந்த லிங்க் <<>>உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு +91-120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 5, 2026

JUST IN: திருவள்ளூரில் எம்.எல்.ஏ-வுக்கு எதிராக போராட்டம்

image

திருவள்ளூர் மாவட்டம் கொசவன்பேட்டையில், திமுக ஓன்றிய அவைத்த தலைவரை தாக்கிய எம்.எல்.ஏ கோவிந்தராஜ்க்கு திருநிலை கிராமத்தில் ஒருதரப்பு மக்கள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். விழா குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என திமுக ஒன்றிய அவைத் தலைவர் முனிவேல் கூறியதாக சொல்லப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ பளார் என கன்னத்தில் சரமாரியாக அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News January 5, 2026

திருவள்ளூர்: லைசன்ஸ் தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்து விட்டதா..? கவலை வேண்டாம். <>’MParivaahan’ <<>>எனும் செயலி மூலம் தொலைந்த லைசன்ஸ், ஆர்.சி புக்கை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், இதன் மூலம் பதிவிறக்கப்படும் இ-லைசன்ஸ், ஆர்.சி புக்கை டிராஃபிக் போலீஸிடமும் ஆவணமாக காட்ட முடியும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

திருத்தணி கோயில் வளாகத்தில் சடலம்!

image

திருவள்ளூர்: திருத்தணி முருகன் மலைக் கோயில் வளாகத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் எழிலரசன் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், திருத்தணி போலீசார் சடலத்தை மீட்டு, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும், அந்த மூதாட்டி யார்..? என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 5, 2026

திருவள்ளூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News January 5, 2026

திருவள்ளூர்: பெற்றோர்களுக்கு மாதம் ரூ.10,000! CLICK NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வயது முதிர்வானோர்களுக்கு ’பிரதான் மந்திரி வய வந்தனா’ பாலிசி திட்டத்தின் மூலம் மாதம் ரூ.10,000 வரை ஓய்வூதியம் பெற்றுத் தரலாம். மேலும், 10 ஆண்டுகள் நிறைவில் உங்கள் முதலீட்டின் இறுதி ஓய்வூதியத் தவணையுடன் அசல் முதலீட்டுத் தொகையையும் மொத்தமாக பெறலாம். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. அல்லது அருகே உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தை அணுகலாம்.

News January 5, 2026

திருவள்ளூர்: ரூ.64,820 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY

image

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 credit officers பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே(ஜன.5) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

திருவள்ளூர்: பாலியல் தொழில் செய்த திருநங்கை கொலை!

image

போரூர், அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சில்பா எனும் திருநங்கை. இவர், வானகரம் சர்வீஸ் சாலை அருகே உள்ள குடோனில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். விசாரணையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த துர்ஜான்(22) என்பவர் சில்பாவுடன் குடோனில் உல்லாசமாக இருந்ததும், தொடர்ந்து சட்டைப் பையில் இருந்த பணத்தை சில்பா பறித்ததால், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதில் துர்ஜான் கைது செய்யப்பட்டார்.

News January 5, 2026

திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

image

செவ்வாப்பேட்டையை அடுத்த திருவூர், சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன்(40). ஆட்டோ டிரைவரான இவருக்கும், இவரது மனைவி சர்மிளாவிற்கும்(35) ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் – மனைவி இடையே நடந்த தகராறில் சர்மிளா கோபித்துக்கொண்டு சென்றுள்ளார். இதனால், விரக்தியடைந்த பாலமுருகன், தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

error: Content is protected !!