India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 விதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும் இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 விதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் அனல் மின் நிலைய 2வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட மெய்யூரில் சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை செய்திராத ஊராட்சியை கண்டித்து பொதுமக்கள் அரசுப்பேருந்தை வழிமறித்து வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தினால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் தொலைபேசி மூலம்பேசி சமரசம் செய்த பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.
திருவள்ளூர் மக்களவைத் தேர்தல் பொன்னேரி பகுதியில் நேற்று காலை 7 மணி தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 311 பூத்களில் வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றி திருவள்ளூர் வேப்பம்பட்டு தனியார் கல்லூரியில் வைப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.
திருவள்ளூர் மக்களவைத் தேர்தல் பொன்னேரி பகுதியில் நேற்று காலை 7 மணி தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 311 பூத்களில் வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றி திருவள்ளூர் வேப்பம்பட்டு தனியார் கல்லூரியில் வைப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.
திருவள்ளூர் மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணி தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 11 பூத் வாக்குப் பெட்டிகளுக்கு அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் ஊராட்சிக்குட்பட்ட வல்லூர் கிராமத்தில் வசிக்கும் 100 வயது முதியவரான ஸ்டீபன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவினை புத் எண் 220க்கு சென்று ஜனநாயக கடமையான தனது வாக்கை பதிவிட்டார். காமராஜர் ஆட்சி காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து தனது ஜனநாயக கடமையான வாக்குரிமையை செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
பொன்னேரி அடுத்த மடிமை கண்டிகை பகுதியில் பாராளுமன்ற தேர்தல் வாக்கின்போது அப்பகுதி வாக்காளர்கள் இப்பகுதிக்கு பேருந்து வசதி இல்லை எனக்கோரி பலமுறை அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏவிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி வாக்காளர்கள் வாக்களிக்காமல் புறக்கணித்ததையொட்டி தகவல் அறிந்த பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின்பேரில் வாக்களிக்க சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் தனி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியது. திருவள்ளூர் வி.எம். நகரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தனது மனைவி லதா உடன் வந்து வாக்காளர்கள் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தபோது வரிசையில் நின்று ஜனநாயக கடமையான தனது வாக்கினை பதிவு செய்தனர்.
மக்களவைத் தேர்தல் 2024 முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நெமிலி கிராமத்தை சேர்ந்த கனராஜ் என்பவர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்குச் சென்றார். அப்போது அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
Sorry, no posts matched your criteria.