India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கனரா வங்கியில் அப்ரண்டிஸ் பயிற்சி வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மொத்த பணியிடங்கள்: 394 (தமிழ்நாடு), கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். சம்பளம்: ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்: 12.10.2025. ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: NSDL, 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in, 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/, 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க!

திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று (11.10.2025) நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, நேரில் பார்வையிட்டார். காவலர்கள் ஒழுக்கம், பொறுப்பு உணர்வு, மக்களுடன் நடந்து கொள்வது போன்ற பணிப்பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முக்கிய அறிவுரைகள் வழங்கினார்.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

கும்மிடிப்பூண்டியில் கஞ்சா போதையில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சந்திரதாஸ், 30 அவரது அறையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் அவரது நண்பரான கார்த்திலால் ஹரிஜன், 30 என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கஞ்சா போதையில் நண்பனை அடித்து கொலை செய்த பகிர் தகவல் தெரியவந்துள்ளது. மேலும், கொலையாளியை போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 88 கிராம பஞ்சாயத்து செயலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்த விருப்பமுள்ளோர் <

திருவாலங்காடு அருகே சின்னம்மாபேட்டை கிராமம் உள்ளது. இங்கு,
நெடுஞ்சாலையை ஒட்டி அரசு நடுநிலைப் பள்ளி எதிரே, 60 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் பலத்த மழை மற்றும் காற்று வீசியதால், மரம் வேரோடு சாய்ந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. மரம் சாலையில் குறுக்கே விழுந்ததால் சுமார் 7 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தர் சுக்லா குற்ற வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகளை விரைவாக கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்கள் இன்று (அக்.10) திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, அவர்களின் சிறப்புப் பணியை பாராட்டி சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

திருவள்ளூர், பள்ளிப்பட்டு வட்டம், சொரக்காய்ப்பேட்டை அருகே கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் தற்போது அப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தரைப்பாலங்களில் சாலையை கடக்கவும், தண்ணீரில் குளிக்கவும் வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.