India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் அஞ்சலக சப்டிவிஷனில் கடந்த நிதியாண்டில் 2023-24 நிதியாண்டில் சிறப்பாக பணி ஆற்றியவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.அருள்தாஸ் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். திருவள்ளூர் உட்கோட்ட கண்காணிப்பாளர் திருவள்ளூர் சப் டிவிஷனல் எஸ்.கௌஷிக் தலைமை தாங்கினார். மற்ற சப் டிவிஷனல் அதிகாரிகளும் பலர் உடன் இருந்தனர்.
ஆவடி அருகில் இந்து கல்லூரி- பட்டாபிராம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று இரவு 8 மணி அளவில் தண்டவாளத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னை- அரக்கோணம் இரு மார்க்கங்களிலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து 45 நிமிடங்கள் போராடி கோளாறை சரி செய்தனர். இதன் பிறகு இரு மார்க்கங்களிலும் ரயில் சேவை தொடங்கியது.
இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி கழகத்தின் மாநிலத் தலைவராக இருந்தவர் ராஜாஜி (45). இவர் பூந்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது, பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் டீக்கடைக்குள் புகுந்து ராஜாஜியை சரமாரி வெட்டிக் கொலை செய்தனர். புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அருகே ஆத்துப்பாக்கத்தில் மது சுந்தர நாயகி சமேத ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் இன்று காலை பூட்டு உடைக்கப்பட்டது கண்டு கிராம மக்கள் பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து ஆய்வு செய்ததில் அம்மன் கழுத்தில் இருந்த 1 சவரன் தாலி, கொலுசு, உண்டியல் பணம் ஆகிவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.22) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பூந்தமல்லி அருகே வானகரம் பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் மடக்கி சோதனை செய்தபோது, அதிலிருந்து 200 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை கடத்திவந்த பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் பெங்களூருவிலிருந்து குட்காவை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.22) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பூந்தமல்லி அருகே கொளுத்துவாஞ்சேரி பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம் சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (69) என்பவருக்குச் சொந்தமானது. இவரது நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, போரூர் பகுதியைச் சேர்ந்த ராஜி என்ற குணசேகரன் (63) என்பவரை நேற்று கைதுசெய்தனர்.
வங்கனூர் சின்ன குளக்கரையில் அமைந்துள்ளது ஆத்ம லிங்கேஸ்வரர் கோவில். நிறைமாத கர்ப்பிணிகள் இங்குள்ள நந்தியம் பெருமானின் சிலையை திருப்பி வைத்தால், சுகப்பிரசவம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிறப்புமிக்க இந்தக் கோவிலுக்கு, அரக்கோணத்தைச் சேர்ந்த தங்க நகைக்கூடம் சார்பில் மணிக்காட்டி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திற்கு கோவிலின் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
அம்பத்தூரில் அரசினர் ஐ.டி.ஐ-யில் கடந்த 10ஆம் தேதி முதல் வருகின்ற ஜூன் 7ஆம் தேதி வரை சேர்க்க விண்ணப்பம் ஆன்லைன் பதிவு நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்ப கட்டணம் ரூ.50ம், நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் மூலம் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.