India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
செங்குன்றம், கும்மிடிப்பூண்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 265 தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. ஆய்வில் 52 பள்ளி பேருந்துகள் இருக்கை, தீயணைப்பான், அவசர கதவு செயல்பாடின்மை, கேமரா உட்பட பல்வேறு காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி இல்லாத வாகனங்கள் இயங்க கூடாது என போக்குவரத்து ஆய்வாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
ஆவடியில் உள்ள சிறப்பு காவல் படை 13வது அணியில் பணியாற்றிவரும் தலைமை காவலர் கண்ணன், காவலர் கபில் கண்ணன் ஆகிய இருவரும் காவல்துறை விளையாட்டு அணியில் கைப்பந்து வீரராக, உலகளவில் தற்போது நடைபெறும் கைப்பந்து போட்டியில் இந்திய அணியில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடக்கும் போட்டியில் இந்திய அணி, கஜகஸ்தான் அணியை நேற்று வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது.
ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் பொன்னியம்மன் கோவிலில் நேற்று பௌர்ணமி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு பௌர்ணமி தீபாரதனையுடன் அம்மனுக்கு சிறப்பு ஆலாபனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜை நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும் இந்த திருத்தலத்தில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை டி ஆர் டி ஒ செயலாளர் சதீஷ் ரெட்டி இன்று நண்பகல் முருகன் கோவிலுக்கு வந்தார். பின்னர் உற்சவர் சண்முகர் ,முருகர் ,மூலவர் முருகர் வள்ளி தெய்வானை சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அப்போது அவருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவடி கோவர்த்தனகிரி, லட்சுமி நகரை சார்ந்த மாணவன் எஸ்.எல்.நிதிஷ்குமார், மாணவி எஸ்.சஹானா ஆகியோர் மலேசியாவில் உள்ள LINCOLN பல்கலைகழகத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகாசன போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் பெற்றனர். இதையடுத்து ஆவடி எம்எல்ஏ நாசர் அவர்களை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின்போது மழை பெய்து குளிர்வித்ததால், பக்தர்களிடம் பரவசத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
பூந்தமல்லி அருகே மதுரவாயல் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக நடந்த செல்லும் சிறுமிகளுக்கு பைக்கில் வரும் மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து போலீசார் 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து, பாலியல் தொல்லையில் ஈடுபட்ட போரூர் அருகே பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் (22) என்பவரை நேற்று கைது செய்தனர்.
இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி அமைப்பின் மாநிலத்தலைவராக இருந்தவர் ராஜாஜி (45). நேற்று மாலை இவர் பூந்தமல்லியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் பூந்தமல்லி, குமணன்சாவடி பகுதியைச் சார்ந்த காங்கிரஸ் பிரமுகர் கோபால் (61), கிருஷ்ணகுமார் (34), சம்பத்குமார் (45), லோகநாதன் (38), சந்தோஷ்குமார் (32), ராஜேஷ் (32) உள்பட 6 பேரை இன்று காலை கைது செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் மேற்கொண்டார். இவருடன் திமுக மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி உடன் வந்திருந்தார். அதனை தொடர்ந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காண்பதற்காக பக்தர்கள் கூட்டம் கூடியது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஐஸ்வர்யா பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துவிட்டு சென்றார்.
Sorry, no posts matched your criteria.