India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே 26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குற்ற சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த எண்ணூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பழவேற்காடு, எண்ணூர் கடலோர மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவடி, கவுரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் மாரியப்பன் (67). இவரது வீட்டு முன்பு மூடி உடைந்த நிலையில், கழிவுநீர் தொட்டி உள்ளது. நேற்று மாலை மாரியப்பன் மதுபோதையில் கழிவுநீர் தொட்டி மீது ஏறி நின்று கொண்டிருந்தார். அப்போது சிமெண்ட் சிலாப் உடைந்து உள்ளே விழுந்து பலியானார். புகாரின் பேரில் ஆவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காக்களூர் ஆவின் பால் பண்ணையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் ஆய்வு செய்த போது நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பால் பொருட்கள் திருடி கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து துணை மேலாளர் கனிஷா உள்பட 3 பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பொது மேலாளர் ரமேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து, ஆவின் மேலாண்மை இயக்குநர் வினித் நேற்று உத்தரவிட்டார்.
திருவள்ளூர், பள்ளிப்பட்டு வட்டம் பெருமாநல்லூர் ஊராட்சியில் உள்ள பெருமாநல்லூர் காலனியில் குடிதண்ணீரில் சாக்கடைத் தண்ணீர் கலந்ததாக கூறப்படுகிறது. இதைகுடித்த 15க்கும் மேற்பட்ட மக்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதை தடுக்கும் வகையில் பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றப்படுதல் மின்தடம் அமைத்தல் பழுதடைந்த மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட தேவைகள் குறித்து நேற்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆய்வு செய்தார். தடையில்லா மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.25) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெகதீஷ்சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை பறிமுதல் செய்து அப்பகுதியில் காலி நிலத்தில் புதைத்து அழிக்கப்பட்டது. நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் உடன் இருந்தார்.
திரிசரணம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு தலைமையில் புத்த ஜெயந்தி நேற்று முன்தினம் (மே 23) கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தமிழ்மாறன், கோட்டாட்சியர் தீபா ஆகியோரும், தலித் மக்கள் முன்னணியினரும் சேர்ந்து புத்தரை வழிபட்டனர். புத்தரின் போதனைகள், பஞ்ச சீலம் குறித்து ஆசிரியர் ஜெய்சங்கர் பேசினர். பரசுராமன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக இருந்த குற்றச்சாட்டு காரணமாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பைச் சேர்ந்த 8 பேரின் உயர் நீதிமன்ற நிபந்தனை ஜாமீனை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து 8 பேரும் சென்னையில் உள்ள ஐ.என்.ஏ அலுவலகத்தில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை ஐ.என்.ஏ அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.