India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் 7வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 27839 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளது. அதிமுக கூட்டணி 7292 வாக்குகள், பிஜேபி 9104 வாக்குகள், நாம் தமிழர் 4286 வாக்குகள், நோட்டா 754 வாக்குகளும் பெற்றுள்ளன.
திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் 6வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது இதில் திமுக கூட்டணி 31630 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளது.. அதிமுக கூட்டணி 8658 வாக்குகள், பிஜேபி 8252 வாக்குகள், நாம் தமிழர் 3831 வாக்குகள், நோட்டா 698 வாக்குகளும் பெற்றுள்ளன. இது 6 வது சுற்றின் வாக்கு எண்ணிக்கை மட்டுமே.
திருவள்ளூர் தொகுதியில் 5-வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 1,46,899 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 45,757 வாக்குகளும், பாஜக வேட்பாளர் பாலகணபதி 41,861 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்படி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி விட, காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 1,01,142 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் தொகுதியில் 4வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 1,15,870 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 37,303 வாக்குகளும், பாஜக வேட்பாளர் பாலகணபதி 35,095 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்படி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியைவிட, காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 78,567 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் 3 வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 71,284 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளது. தொடர்ந்து அதிமுக கூட்டணி 22,934 வாக்குகள், பிஜேபி 23,079 வாக்குகள், நாம் தமிழர் 10,793 வாக்குகளும் பெற்றுள்ளன.
திருவள்ளூர் தொகுதியில் இன்று காலை 8.00 மணி முதல் தபால் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. 8.45 மணி நிலவரப்படி தபால் வாக்கில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் முன்னிலையில் உள்ளார். வாக்கு விபரம் பின்வருமாறு: காங்கிரஸ் — 700; தே.மு.தி.க — 500; பா.ஜ.க —100; நா.த.க– 20. மேலும் தபால் வாக்கு தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு பகுதியில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு 200 மீட்டருக்கு அப்பால் செய்தியாளர்கள் நிறுத்தப்பட்டதால், அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்குமாறு வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் மொத்தம் 68.31% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக சார்பில் சசிகாந்த் செந்திலும் (காங்), அதிமுக சார்பில் நல்ல தம்பியும் (தேமுதிக), பாஜக சார்பில் பாலகணபதியும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News-உடன் இணைந்திருங்கள்.
ஜூன் 3 திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்த நடிகை ரோஜா சிறப்பு வழியில் ஆபத் சகாய விநாயகர், சண்முகர் ,மூலவர் ,வள்ளி தெய்வயானை மற்றும் உற்சவர் ஆகிய சன்னதிகளில் தனது ஆதரவாளர்களுடன் சென்று தேர்தலில் வெற்றி பெறவும் மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க வேண்டும் என சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டார். தொடர்ந்து ரோஜாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் மலர்கள் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.