Thiruvallur

News August 13, 2024

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் இன்று (ஆக.13) கூறியதாவது, தமிழ்நாடு சீர்மரபினர் வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினருக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை, கல்வி, திருமண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே உறுப்பினர்கள், தங்களது உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

News August 13, 2024

திருவள்ளூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு

image

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில், வரும் 16ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 25க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயம் படித்தவா்கள் பங்கேற்று பயன்பெறலாம். SHARE NOW

News August 13, 2024

காவல் துணை கண்காணிப்பாளர் மாரடைப்பால் மரணம்

image

அம்பத்தூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் சரவணன், நேற்றிரவு மூச்சுத் திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார். திருமுல்லைவாயல் அடுத்த நாகம்மை நகரில் உள்ள தனது வீட்டில், நேற்றிரவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டதில், அவர் மாரடைப்பில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News August 13, 2024

அஸ்வத்தாமன், நாகேந்திரனை காவலில் எடுக்க முடிவு

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனை காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டியது எப்படி? யாருக்கெல்லாம் இதில் தொடர்பு என போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மேலும், அவரது தந்தையும் பிரபல ரவுடியுமான நாகேந்திரனையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

News August 12, 2024

திருவள்ளூரில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று இரவு 1 மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

News August 12, 2024

கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

image

நடப்பு சொர்ண வாரிப் பருவத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுவதற்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் திருவள்ளூரில் நேற்று நடைபெற்றது. விவசாயிகளிடம் கூடுதலாக கட்டணத்தை வசூலிக்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் எச்சரித்தார். மேலும், 9344839708, 044 -27662228 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

News August 12, 2024

1,000 மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கிய அமைச்சர்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டறை பெரும்புதூரில், நேற்று தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில், பயன் பெற்ற 1,000 மாணவர்களுக்கு அமைச்சர் ஆர். காந்தி மஞ்சப் பைகளை வழங்கினார். மாநிலம் முழுவதும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் ‘மீண்டும் வஞ்சப்பை’ பிரச்சாரத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் பிரபு சங்கர் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

News August 12, 2024

526 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

image

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் பொதுமக்களின் குறைகளை கேட்டு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரிகள் முனைப்புடன் செயலாற்ற வேண்டுமென கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

News August 12, 2024

திருத்தணி விபத்தில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

image

திருத்தணி அடுத்த ராமஞ்சேரி பகுதியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் நேற்று உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 மாணவர்கள் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். இறந்தவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 12, 2024

திருவள்ளூரில் பரவலாக மழை பெய்தது

image

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. குறிப்பாக, மீஞ்சூர், திருமழிசை, பூந்தமல்லி, திருநின்றவூர், பொன்னேரி, திருத்தணி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா?

error: Content is protected !!