India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதிய ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றாலோ (அ) உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் இந்த தளத்திலே புகார் அளிக்கலாம். முதலில் உங்கள் பெயரை குறிப்பிட வேண்டும். உங்கள் தொலைபேசி எண் & E-mail முகவரியை உள்ளிட வேண்டும். வகைப்பாடு என்னும் இடத்தில் மின்னணு அட்டை கிடைக்க பெறவில்லை (அ) மின்னணு அட்டை குடும்ப விவரங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்பதை தேர்வு செய்து புகாரை அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!
திருவள்ளூரைச் சேர்ந்த திவ்யா கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். டி.பி.சத்திரம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 5) தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் தந்தை பணிச்சுமை காரணமாகதான் தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மக்களே, இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு மேல்தான் இந்த <
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஆர்.கே.பேட்டை, பூந்தமல்லி, கடம்பத்தூர், சோழவரம், திருத்தணி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இங்கு <
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா ஆகஸ்ட் 14 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவில் அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 13க்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (04/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*.
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் / தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், படித்து வேலையற்ற ஆண்/பெண் இருபாலருக்கும் வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் 07.08.2025 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 வரை தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி, பட்டாபிராமில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயில் திருமண தடை நீக்கும் புண்ணிய தலமாக உள்ளது. இங்கு மரத்தாலான கருமாரி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. மரச்சிலை அம்மன் என பெயர்கொண்ட இந்த அம்மனிடம் வேண்டி கொண்டால், நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.
▶திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு, ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு திருவள்ளூர் அஞ்சலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<17028562>>தொடர்ச்சி<<>>
Sorry, no posts matched your criteria.