India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருத்தணி நகைக் கடையில் திருடிய நபரை போலீஸாா் நேற்று கைது செய்து, தங்கம், வெள்ளிப் பொருள்களை மீட்டனா். முருகப்ப நகா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (55). இவரின் நகை அடகுக்கடையில் 43 கிராம் தங்க நகைகள், 2 கிலோ 880 கிராம் வெள்ளி, ரூ.68,000 பணத்தைத் திருடிச் சென்றனா். விசாரணையில் அடகு கடையில் திருடியவா் சென்னை சைதாப்பேட்டையை சோ்ந்த பங்க் முருகன் (61) என்பது தெரியவந்தது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமையில் ஜவுளி தொழில் முனைவோர்களுடன் சிறிய அளவிலான பூங்கா ஜவுளி பூங்கா திட்டம் குறித்து விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் தொழில் முனைவோருக்கு 2 கோடி 50 லட்சம் ரூபாய் வரை நீதிபதி தமிழக அரசால் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இன்று இரவு 7 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று கரையை கடந்தது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்களுக்கான கூட்டம் மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருத்தணி என்.எஸ்.போஸ் சாலையில் உள்ள நகைக் கடை மற்றும் அடகு கடையில், நேற்றிரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கடையில் இருந்த 43 கிராம் தங்க நகை, 6 கிலோ வெள்ளி, ரூ.3 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பங்க் முருகன்(60) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் திருடியதை ஒப்புக்கொண்டார்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்கு முன்பதிவு செய்ய, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 5 பிரிவுகளில், 27 விளையாட்டு போட்டிகள், மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிக்கு வரும் செப்.2ஆம் தேதி வரை, முன்பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுவினர் மதி சிறகுகள் தொழில் மையத்தில் பதிவு செய்து தொழில் தொடங்கி பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மகளிர் உதவிக் குழு உறுப்பினர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் மக்கள் இந்த சேவைகளைப் பெறலாம்.மேலும் அலைபேசி எண் : 8939009163, 8825769032 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஆவடியில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பூண்டி 4 செ.மீ, சோழவரம், தாமரைப்பாக்கம், செங்குன்றம், திருவள்ளூரில் தலா 3 செ.மீ பதிவாகியுள்ளது. பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, திருவாலங்காடு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டியில் தலா 2 செ.மீ மழையும், திருத்தணி, ஆர்.கே.பேட்டையில் தலா ஒரு செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
சென்னை பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி இடையே புறநகர் மின்சார ரயில் பாதையில் கோளாறு ஏற்பட்டதால் சென்னையிலிருந்து திருவள்ளூர், அரக்கோணம் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 30 நிமிடங்களாக நிறுத்தப்பட்ட ரயில்களால் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் குவிந்துள்ளனர். சுமார் 30 நிமிடங்களாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சோழவரம் அருகே பள்ளிவாசலில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளிவாசல் ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பள்ளிவாசலுக்கு வந்து அரபி பயிலும் சிறுமிகளுக்கு பயிற்சியாளர் முகமது ஆசிப் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் பள்ளிவாசல் அரபி ஆசிரியர் முகமது ஆசிபை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.