Thiruvallur

News February 6, 2026

ஆவடியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதியில் நில மோசடி மற்றும் பண மோசடி வழக்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கை நடைபெற்றது. இதில், போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்டு 4 வழக்கில் தொடர்புடைய சுமார் 7 நபர்களும் மற்றும் பணமோசடி வழக்கில் 1 நபரையும் கைது செய்தனர்.

News February 6, 2026

திருவள்ளூர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்னிகா(27), பெண் காவலர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, உடற்தகுதி தேர்வுக்காக வேப்பம்பட்டில் வசிக்கும் பெரியம்மா வீட்டில் தங்கி வந்தார். ஆவடியில் உடற்தகுதித் தேர்வு ஏற்பட்டது. இதில், அவருக்கு புள்ளிகள் குறைவாகக் கிடைத்ததால் மன வேதனை அடைந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு தூங்கச் சென்ற ஹர்னிகா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News February 6, 2026

பூண்டி அருகே துடிதுடித்து பலி!

image

சதுரங்கப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன்(37). பொக்லைன் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு திருவள்ளூரில் இருந்து தேவேந்திரன், பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புல்லரம்பாக்கத்தில் எதிரே வந்த வினோத்(34) ஓட்டி வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வினோத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News February 6, 2026

கும்மிடிப்பூண்டி அருகே பரிதாப பலி!

image

பாதிரிவேடு அடுத்த தாணியம்பூண்டி கிராமத்தில் இரும்பு குழாய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் பீகாரைச் சேர்ந்த ஜலாவுதீன்(48). நேற்று முன் தினம் இரவு, இவரின் பணியின் போது இரும்பு குழாய் தவறி இவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 6, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு.

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 6, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு.

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 5, 2026

திருவள்ளூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

திருவள்ளூரில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 5, 2026

திருவள்ளூர்: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

திருவள்ளூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<> கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க

News February 5, 2026

திருத்தணி BDO அலுவலகத்தில் வேலை! APPLY

image

திருவள்ளூர்: திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் இரவு காவலர், ஓட்டுநர் ஆகிய மூன்று பணியிடங்கள் காலியாக உள்ளன. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை ஒன்பது முப்பது மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். வருகிற பிப்.9 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 5, 2026

திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

error: Content is protected !!