India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 7:55, 10:55 நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் இரவு 10:20-க்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. இரயில்கள் ரத்து செய்யப்படுவதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஸ்ரீ ராமாபுரம் கண்டிகை பேருந்து நிலையம் அருகில் இன்று சவுடு லோடு ஏற்றி வந்த லாரி (கனரக வாகனம்) ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
திருத்தணி கமலா திரையரங்கு அருகில் திராவிடர் கழக மாணவர் அணி சார்பில் தேசிய கல்வி கொள்கை ஏற்றத்தால் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்ற மத்திய அரசின் நிர்பந்திப்பை கண்டித்து திராவிட கழக மாவட்ட தலைவர் ம.மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பொதட்டூர் பேட்டை புவியரசன், கிருஷ்ணமூர்த்தி, அறிவழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
திருவள்ளூரில் முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000 வீதம் வழங்கப்படவுள்ளது. தகுதி உடையவர்கள் www.sdat.tn.gov.in மின்னஞ்சல் மூலமாக செப்.30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்றிரவு பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில் மழையா? கமெண்ட் பண்ணுங்க
விநாயகர் சதுர்த்திக்காக பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது எனக் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கக்கோரி சுரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என உத்தவிட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் இலகுவான தொடர்புக்கு வெளியிடப்படுகிறது. தினமும் வெளியிடப்படும் இப்பட்டியலால் பொதுமக்கள் மிகவும் பயனுள்ளதாக கருதுகின்றனர். வீட்டை பூட்டிக் கொண்டு வெளியூர் பயணம் செல்லும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளிக்கவும் உதவுகிறது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழா-2024 நடைபெறுவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் முன்னிலையில் துறை அலுவலர்களுடன் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. காவல்துறை மற்றும் அனைத்து துறை முக்கிய அதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்றனர்.
திருவள்ளூரில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. பல்வேறு பிரிவினரும் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுளள்து . விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் .இன்று மாலை 5 மணி வரை பதிவு செய்ய முடியும்.
புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த கைதிகளுக்கான கேன்டீன் திறக்கப்பட்டுள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அம்பத்தூர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தவிடப்பட்டுள்ளது. புழல் சிறையில் மூடிய கேன்டீனை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி விசாரணை கைதி பக்ருதீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையை செப்.10 ஆம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Sorry, no posts matched your criteria.