Thiruvallur

News July 16, 2024

திருவள்ளூரில் பட்டதாரி இளைஞர்களுக்கு அழைப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். தகுதி: 21-40 வயது. அரசு, தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளோர் ‘AGRISNET’ என்ற இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட, வட்டார வேளாண் இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 15, 2024

திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 15, 2024

திருவள்ளூரில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூர் உட்பட 21 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு எற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு மழை பெய்ய வாய்ப்பு.

News July 15, 2024

திருவள்ளூர்: 10 பேருந்துகளை தொடங்கி வைத்த முதல்வர்

image

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு கூட்ரோட்டில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், விழுப்புரம் கோட்டம் – தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ₹3.81 கோடி செலவில் 8 புறநகர பேருந்துகள் மற்றும் 2 மகளிர் விடியல் பயண நகர பேருந்துகள் என மொத்தம் 10 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

News July 15, 2024

திருவள்ளூரில் இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்

image

அகல ரயில் பாதை திட்டத்திற்கு இடம் கையகப்படுத்துவதற்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம் திருவள்ளூரில் நடக்கிறது. திருவள்ளூர் ஆட்சியர் பிரபு சங்கர் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை வட்டங்களில் உள்ள கிராமங்களில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை கொடுத்து இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம்.

News July 15, 2024

காலை உணவுத் திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர்

image

காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட காலை உணவு திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி, இத்திட்டத்தை கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி அரசு உதவிபெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் எம்பி, தலைமைச் செயலர், கலெக்டர் கலந்துகொண்டனர். காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தின் புதிய பாய்ச்சலாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது.

News July 15, 2024

காலை உணவுத் திட்டம்: தொடங்கி வைக்கிறார் முதல்வர்

image

முதல்வர் ஸ்டாலின் இன்னும் சில மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட காலை உணவு திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி, இத்திட்டத்தை கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி அரசு உதவிபெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.

News July 14, 2024

என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் மாஜிஸ்ட்ரேட் விசாரணை

image

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் இன்று காலை புழல் அருகேயுள்ள வெஜிடேரியன் நகரில் விசாரணையின் போது போலீசாரிடமிருந்து தப்ப முயன்றான்.அப்போது போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்நிலையில் மாதவரம் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் தீபா
என்கவுண்டர் நடைபெற்ற போது இருந்த காவலர்கள் மற்றும் திருவேங்கடம் உறவினர்களிடம் இன்று இரவு விசாரணை நடத்தினார்.

News July 14, 2024

முதல்வர் வருகை; அமைச்சர் ஆய்வு

image

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டத்தை கீழச்சேரி புனித அன்னாள்பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை கைத்தறி, துணிநூல்துறை அமைச்சர் காந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

News July 14, 2024

விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

image

தமிழ் ஆர்வலர்கள் தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார். 2024 ஆண்டிற்கான விருதுக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வானோருக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!