India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு கடற்கரை மாவட்டங்களில் ஒன்றாம் எண் புயல் கொண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜயவாடாவில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் மக்கள் தவித்து வரும் நிலையில் தொடர்ச்சியாக தமிழகத்திலும் மழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் கட்சி, தேமுதிகவுடன் கூட்டணி குறித்து விஜய் இடம் கேளுங்கள் என்றும், முதல்வர் சிகிச்சை பெற அமெரிக்கா சென்றாரா, முதலீடு இருக்க சென்றாரா என்ற கேள்விக்கான பதில் மக்களிடம் விட்டு விடுகிறேன் என அவர் தெரிவித்தார்.
திருத்தணி அருகே வீட்டில் பரவிய தீயில் சிக்கிய 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தாயும் உயிரிழந்தார். செப்.06 ஆம் தேதி நள்ளிரவு வீட்டு வளாகத்தில் இருசக்கர வாகனங்களில் பிடித்த தீ வீட்டிற்குள் பரவியது. தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுளா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். தீ விபத்தில் காயம் அடைந்த தந்தை பிரேம்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் விக்னேஷ் நகர் பகுதியில் வசிப்பவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சட்டராம் (35). இவர் தொடர்ந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்து வந்துள்ளார். தொடர்ந்து, இந்த பணியில் ஈடுபட்டதால் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் குண்டாஸில் அடைக்க உத்தரவிட்டார்.
பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளில் போதைப் பொருள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட காவல்துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் இடையே போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் நடத்த வேண்டும், உணவு பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்பு மற்றும் காவல் துறையினர் இணைந்து கடைகளில் கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட அரசு நகர மற்றும் விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் மினி பேருந்து இயக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மினி பேருந்து இயக்குவதற்கான கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 50 மினி பேருந்து வழித்தடம் அமைப்பதற்கு சர்வே மேற்கொண்டு, அறிக்கையை உடனடியாக சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
பூந்தமல்லி அருகே மதுரவாயல் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1001 தேங்காய்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை இன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டன. இதனை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்து பார்வையிட்டு தரிசனம் செய்தனர். அனைவரின் கவனத்தை ஈர்த்த விநாயகர் சிலையை தங்களது கைப்பேசியில் செல்பி புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள், உயிர் நுண்ணுட்ட உரங்கள், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட இடுபொருட்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஏடிஎம் கார்டு, கூகுள்பே உள்ளிட்ட மின்னணு வசதிகள் மூலம் பெறுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை விரிவாக்க மையங்களில் அதற்கான பண மில்லா மின்னணு பரிவர்த்தனை செய்யும் பிஓஎஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் -திருவள்ளூர்-ஆவடி இடையே செப்.9ஆம் தேதி முதல் 3 புதிய மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செப்.9ஆம் தேதி முதல் ஆவடியில் இருந்து காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கும், சென்ட்ரலில் இருந்து காலை 10.40 மணிக்கு திருவள்ளூருக்கும், மறுமாா்க்கமாக திருவள்ளூரில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு சென்ட்ரலுக்கும் என 3 புதிய மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
Sorry, no posts matched your criteria.