India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் இன்று புகார் மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், உதவி ஆட்சியர் ஆயுஷ் குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கலந்து கொண்டு, 119 பேரிடமிருந்து மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை வாயிலாக, நெல் அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்து, குறைந்த வாடகையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். தற்காலிக தீர்வாக, பிற மாவட்டங்களில் இருந்து 3 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்து இந்நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், சரண்டர் பழைய ஓய்வுதியும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். நாளை திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகே போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
சென்னை சென்ட்ரல் -திருவள்ளூர்-ஆவடி இடையே இன்று 3 புதிய மின்சார ரயில் சேவைகள் தொடங்கின. ஆவடியில் இருந்து காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கும், சென்ட்ரலில் இருந்து காலை 10.40 மணிக்கு திருவள்ளூருக்கும், மறுமாா்க்கமாக திருவள்ளூரில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு சென்ட்ரலுக்கும் என 3 புதிய மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகள் குறித்து இழிவாக பேசிய புகாரில் மகாவிஷ்ணு ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளார்.இந்த நிலையில், திருவள்ளூரில் மகாவிஷ்ணுவை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மாவட்ட கூட்டமைப்பு சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பேரணியாக சென்று கலெக்டர் பிரபு சங்கரிடம் மாற்று திறனாளிகள் புகார் மனு அளித்தனர்.
சென்னை எழும்பூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலை நேருபார்க் ஹவுசிங் போர்டில் இருந்து பூண்டி மாதா கோவிலுக்கு சென்ற 5 இளைஞர்கள் அங்குள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில், 5 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு குழுவினர் 3 பேர் உடலை மீட்டுள்ளனர். மேலும், இருவரின் உடல்களை தேடி வருகின்றனர். ஒரே பகுதியை சேர்ந்த 5 நபர்கள் இறந்த செய்தி அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயல் சின்னமாக வலுவடைந்து வருவதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில், அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அலமாதி பகுதியில் இன்று சாலை தடுப்பில் வாடகை கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கார் ஓட்டுநர் மற்றும் காரில் பயணித்த தாய், மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், தந்தை, மகன் ஆகியோர் படுகாயமடைந்து செங்குன்றம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.