Thiruvallur

News July 7, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று (ஜூலை 7) இரவு 7 மணி வரை மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

News July 7, 2024

ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது

image

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பெரம்பூரில் இருந்து பொத்தூருக்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. இந்த இறுதி ஊர்வலத்தையொட்டி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

News July 7, 2024

சொந்த நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்: நீதிபதி உத்தரவு

image

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில், அடக்கம் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், இன்று மாலை அவரது உடல் ஊர்வலமாக கொண்டு சென்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

News July 7, 2024

திருவள்ளூர் கலெக்டர் வருத்தம்; போராட்டம் வாபஸ்

image

திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளிகளில், 60%க்கும் குறைவான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கலெக்டர் பிரபுசங்கர் கடுமையாக எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக, ஜாக்டோ- ஜியோ எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் நேற்று கலெக்டரை நேரில் சந்தித்த போது, அவர் பேசியதற்கு வருத்தம் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

News July 7, 2024

திருவள்ளூர் ஆட்சியர் தகவல்

image

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாற்றுத்திறனாளிகள், மகளிர், பொறியியல், கலை அறிவியல் கல்லூரி, தொழில் பயிற்சி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் வரும் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி தொழில் நெறி விழிப்புணர்வு, திறன் மேம்பாட்டு வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதில், அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News July 6, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 06) இரவு 9 மணி முதல் நாளை காலை 7 மணி வரை, இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்களை திருவள்ளூர் காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் குற்ற சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட காவல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 6, 2024

திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு

image

“தமிழ்நாடு நாள்” விழா கொண்டாட்டத்தை ஒட்டி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் +2 வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே போட்டியில் அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் இன்று தெரிவித்துள்ளார்.

News July 6, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை அளவு விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் பின்வருமாறு (நேற்று காலை 6 முதல் இன்று காலை 6 வரை): திருவள்ளூரில் 62 மி.மீ, ஜமீன் கொரட்டூரில் 41 மி.மீ, ஆவடியில் 38 மி.மீ, ஆர்.கே.பேட்டையில் 30 மி.மீ, செங்குன்றத்தில் 25 மி.மீ, பூந்தமல்லியில் 19 மி.மீ, கும்மிடிப்பூண்டியில் 16 மி.மீ, ஊத்துக்கோட்டையில் 13 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் 308 மி.மீட்டர் மழை பெய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 6, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளின் நீர்மட்டம் நிலவரம்

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,743 மில்லியன் கனஅடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 129 மில்லியன் கனஅடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,482 மில்லியன் கனஅடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 65 மில்லியன் கனஅடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 300 மில்லியன் கனஅடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஜூலை 6) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News July 6, 2024

திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்றிரவு அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த சில நாள்களாக இரவில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

error: Content is protected !!