India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் காவல் சரகத்தில் உதவி ஆய்வாளர் பார்த்திபன், ஊத்துக்கோட்டை சரகத்தில் உதவி ஆய்வாளர் முனிரத்தினம், திருத்தணி காவல் சரகத்தில் உதவி ஆய்வாளர் இளங்கோ, கும்மிடிப்பூண்டி சரகத்தில் உதவி ஆய்வாளர் வினோத்குமார் ஆகியோர் இன்று (ஜூலை-10) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். எனவே பொதுமக்கள் அவசர தேவைக்கு மேற்கண்ட அதிகாரிகளின் கைப்பேசியை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொசஸ்தலை ஆற்றிலும், புழல் ஏரி பகுதியிலும் குப்பை கொட்டப்படுவதை தடுக்க குப்பை கொட்டும் இடம் தேர்வு செய்யப்பட்டதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு திருவள்ளூர் கலெக்டருக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 9ல் நடைபெறும் என தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,686 மில்லியன் கனஅடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 129 மில்லியன் கனஅடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில்1,439 மில்லியன் கனஅடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 65 மில்லியன் கனஅடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 298 மில்லியன் கனஅடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஜூலை 10) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் வருகிற ஜூலை 13 ஆம் தேதி அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் செய்ய உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணிவரை பதிவான மழை அளவு விவரம்: ஊத்துக்கோட்டையில் அதிகபட்சமாக 11 மிமீ மழை பதிவாகியுள்ளது. ஆவடியில் 6 மிமீ, செங்குன்றத்தில் 5 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 1.50 மிமீ மழை பதிவாகியுள்ளது. 1 வாரமாக மழை தொடர்ந்து பரவலாக பெய்து நீர்நிலைகள் நிரம்பிய நிலையில், தற்போது மழை குறைந்ததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,703 மில்லியன் கனஅடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 129 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,453 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 66 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 299 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஜூலை 9) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணிவரை லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையாக அதற்கேற்றவாறு தயார்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக திருவள்ளூரின் பல பகுதிகளில் பகலில் வெயிலும் இரவில் நல்ல மழையும் பெய்துவருவது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(ஜூலை 8) மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் மாதாந்திர பொது விநியோகத் திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் விநியோகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சண்முகவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக ஆவடியில் 62 மிமீ மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூரில் 15 மிமீ, ஜமீன் கொரட்டூரில் 25 மிமீ, ஆர்.கே.பேட்டையில் 24 மிமீ, செங்குன்றத்தில் 10, பூந்தமல்லியில் 11, திருத்தணியில் 30, ஊத்துக்கோட்டையில் 14 என மொத்தமாக மாவட்டத்தில் 206 மிமீ மழை பெய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,720 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 129 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,468 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 66 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 299 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஜூலை 8) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.