India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே வழக்கறிஞர் சிவா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரது வீட்டில் இருந்து ரூ.9 லட்சம் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 17 பேர் கைதான நிலையில், ஒருவர் எங்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஜீலை 25 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குற்ற சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது
திருவள்ளூர் மாவட்ட தேமுதிக சார்பில் ஆவடியில் இன்று (ஜூலை25) தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போகிறது என்றும், மின் கட்டணம் உயர்வதோடு மின்தடையும் ஏற்படுகிறது என்றார். மேலும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என ஆவேசமாக பேசினார்.
திருவள்ளூர் மாவட்ட எஸ் பி சீனிவாச பெருமாள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவள்ளூர் மாவட்ட காவல் துறைக்கு சம்பந்தப்பட்ட 2 சக்கர வாகனங்கள் 23) 4 சக்கர வாகனங்கள் 3 என மொத்தம் 26 வாகனங்கள் ஜூலை 30ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூர் எஸ் பி அலுவலகத்தில் ஆயுதப்படை மைதானத்தின் அருகே ஏலம் விடப்பட உள்ளது. இதற்கான முழு விபரங்கள் எஸ்பி அலுவலக பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,607 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 118 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,513 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 144 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 311 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஜூலை 25) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வரும் 12 பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஷ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தணி முருகன் கோயிலில் வரும் 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி ஆடி கிருத்திகை விழா மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஆந்திர மாநிலம், கர்நாடகா மாநிலம், வேலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்கு தடை இன்றி வந்து உடனே தரிசனம் செய்து வெளியேறுவதற்கு 600 அரசு பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படு என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(ஜூலை24) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குற்ற சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறவுள்ள ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள தணிகை இல்லம் தங்கி சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் ரூ.34 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக தங்கும் விடுதி கட்டப்பட்டது. இதனை அறங்காவலர்கள் உஷா ரவி, மோகனன், சுரேஷ் பாபு, நாகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த ரவுடி வைரமணி, ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்பு தனது சொந்த ஊரான வீரநல்லூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் நெல்லையில் அவரை கைது செய்தனர். அவர் ஆற்காடு சுரேஷின் கூட்டாளி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது, கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.