Thiruvallur

News July 21, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அடுத்தடுத்து சிக்கும் பிரமுகர்கள்

image

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்பு இருப்பதாக, கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலராக உள்ள ஹரிஹரன் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய 14 பேர் ஏற்கெனவே கைதான நிலையில், பாஜக, தமாக, திமுக உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்போ செந்தில் என்ற பிரபல ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், கைதவனர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 20, 2024

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் சரகத்தில் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின், ஊத்துக்கோட்டை சரகத்தில் ஆய்வாளர் பாரதி, திருத்தணி சரகத்தில் ஆய்வாளர் கோவிந்தன், கும்மிடிப்பூண்டி சரகத்தில் ஆய்வாளர் வடிவேல் முருகன் ஆகியோர் இன்று (ஜூலை-20) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேற்கண்ட அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 20, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலர் கைது

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கோலை வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலராக உள்ள ஹரிதரன் என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய 5 செல்போன்களை வெங்கத்தூர் கூவம் ஆற்றில் இருந்து ஸ்கூபா வீரர்கள் மூலம் போலீசார் மீட்டனர்.

News July 20, 2024

திருவள்ளூரில் அறிவுசார் நகரம்: ஆட்சேபனை தெரிவிக்கலாம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த, எல்லாபுரம் ஒன்றியம் மேல்மாளிகைபட்டு கிராமத்தில் 17 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முதல்நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனை உள்ளவர்கள் மாநெல்லூர் சிப்காட் தொழில் பூங்கா மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கலாம், ஆட்சேபனை மனு குறித்து ஆகஸ்ட் 22ம் தேதி விசாரணை நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 20, 2024

ஆஸ்ட்ராங் கொலை: திருவள்ளூர் எம்பி பரபரப்பு பேட்டி

image

இணைந்தெழு தமிழ்நாடு இயக்கத்தின் மாநில அளவிலான கூட்டம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராய அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்துரை நிகழ்த்தினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ஆருத்ரா மோசடியை தீர விசாரித்தால் ஆம்ஸ்ட்ராங் கொலை மட்டுமல்லாமல் பல சம்பவங்களை தடுக்கப்படலாம் என்றார்.

News July 19, 2024

சி.ஆர்.பி.எப் தேர்வில் ஆள்மாறாட்டம் – இளைஞர் கைது

image

ஆவடி, சி.ஆர்.பி.எப்-பில் துப்புரவு பணியாளர்களுக்கான உடற்தகுதி தேர்வில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கரண் சிங் ரத்தோர் (21) என்பவர் பங்கேற்றார். அப்போது எழுத்து தேர்வில், இவருக்கு பதிலாக வேறு ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தெரியவந்தது. புகார் பெற்று ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிந்து கரண் சிங் ரத்தோரை இன்று (ஜூலை.19) கைது செய்தனர்.

News July 19, 2024

1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

பொன்னேரி, காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஒடிசா மேற்குவங்கம் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தலின்படி புயல் தொலைதூரத்தில் இருப்பதை குறிக்கும் வகையில் எச்சரிக்கை கூண்டு தமிழகத்தில் காட்டுப்பள்ளி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 19, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (19-07-2024) இரவு 7 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 19, 2024

திருவள்ளூரில் அறிவுசார் நகரத்திற்கான பணிகள் தொடக்கம்

image

திருவள்ளூரில் ரூ.200 கோடி செலவில் கல்வி மையங்கள், திறன்மிகு மையங்கள், அறிவுசார் தொழிலகங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு அறிவுசார் நகர்’ அமைப்பதற்கான நிலம் எடுப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேல்மாளிகைப்பட்டு கிராமத்தில் 17 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முதல்நிலை அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பான ஆட்சேபனை இருந்தால் மாநெல்லூர் சிப்காட் தொழிற்பூங்கா மாவட்ட வருவாய் அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம்.

News July 19, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,682 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 130 மில்லியன் கன அடி தண்ணீரும் செம்பரம்பாக்கம் ஏரியில்1,502 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 127 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 315 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஜூலை 19) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!