India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த சுழற்சியை நோக்கி வங்கக்கடல் காற்றும் பயணிப்பதால், தமிழகத்தில் மழைக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று (அக்.4) தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் 2 மணிவரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, திருமழிசை, புட்லூா், திருவூா், அரண்வாயல், அரண்வாயல் குப்பம், புதுச்சத்திரம். திருநின்றவூா், நெமிலிச்சேரி, பிரகாஷ் நகா், பாலாஜி நகா், நடுகுத்தகை, சி.டி.எச்.ரோடு, ராஜாங்குப்பம், கொசவன்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சைபர் கிரைம் காவல் நிலையம் அறிமுகமில்லாத எண்களில் வரும் வீடியோ கால் அழைப்புகளை ஏற்க வேண்டாம். அவ்வாறு வரும் அழைப்புகளை ஏற்றால், வீடியோ கால் பதிவு செய்து தங்களுடைய புகைப்படம் தவறாக சித்துரிக்கப்பட்டு உங்கள் நண்பர் மற்றும் உறுவினர்களுக்கு அனுப்புவதாக கூறி பணம் கேட்டு மிரட்டுவார்கள்.என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பிரிதிவி நகரில் அமீர் மொய்தீன் என்பவர் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இவரது 2 வயது ஆண் குழந்தை முகமது ஆசிப் நேற்று முன்தினம் மாலை வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, முகமது ஆசிப் எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த குழந்தை ஸ்டான்லி மருத்துவமனை சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தது.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு ரயில் சென்னை நோக்கி வந்தது. இந்த ரயில் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே வரும்போது திடீரென 2 பெட்டிகள் இடையே உள்ள இணைப்பு கொக்கி உடைந்து எஞ்சின் உடன் இருந்து பெட்டிகள் கழன்று சென்று விட்டது. தொடர்ந்து, புதிய ரயில் கொக்கிகளை கொண்டு இணைத்தனர். இதனைத் தொடர்ந்து ரயில் புறப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
ரவுடி லட்சுமணனின் மனைவி ரம்யா போலீஸ் எனக் கூறி, நள்ளிரவில் கூலிப்படையினருடன் சென்று 3 பேரை வெட்டிய சம்பவம் திருவள்ளூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு ரவுடியான விஷ்ணுவுடன் ரம்யா பழகியுள்ளார். ஜாமீனில் வெளிவந்த லட்சுமணன் இதனைக் கண்டித்துள்ளார். செப்.23ஆம் தேதி விஷ்ணு, லட்சுமணனை கொலை செய்துள்ளார். கணவரை கொலை செய்ததால் ஆத்திரமடைந்த ரம்யா, விஷ்ணுவின் குடும்பத்தினரை கொலை செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, உட்பட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும். உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலத்தீவு மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தோட்டக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரகு. அவரது மனைவி ஜெயபாரதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.இவர்களது மருமகள் அர்ச்சனா. இவர்கள் அனைவரையும் 5 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவு இவர்களது வீட்டுக்குள் புகுந்து கத்தியால் சரமாரியாக வெட்டினர்.இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 பேரை தேடி வந்தனர்.இந்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.