Thiruvallur

News July 28, 2024

திருவள்ளுர் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை

image

திருத்தணி முருகன் கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், 5ஆம் படை வீடாகத் திகழ்கின்றது. இங்கு ஆடி கிருத்திகையை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு ஆடி கிருத்திகை நாளை (ஜூலை 29) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10 வேலை நாளாக செயல்படும்.

News July 27, 2024

திருத்தணி திருவலங்காடு தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

image

திருத்தணி மற்றும் திருவலங்காடு தோட்டக்கலைத் துறை சார்பில் தென்னங்கன்றுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தென்னங்கன்று விலை ரூ.60-க்கு விற்பனையாகிறது. தென்னங்கன்று தேவைப்படும் விவசாயிகள் திருவாலங்காடு மற்றும் திருத்தணி தோட்டக்கலை அலுவலகத்தில் முன்பதிவு செய்து அதற்கு உண்டான பங்கு தொகையை செலுத்தி செடிகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 27, 2024

மத்திய பட்ஜெட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

image

திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, தலைமையில்
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

News July 27, 2024

திருவள்ளூர் ஏரிகளின் நிலவரம்

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,603 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 114 மில்லியன் கன அடி தண்ணீரும் செம்பரம்பாக்கம் ஏரியில் 1,484 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 123 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 309 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று(ஜூலை 27) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News July 27, 2024

திருத்தணி முருகன் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

image

திருத்தணி முருகன் கோயிலில் 5 நாட்கள் ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்ப திருவிழா நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் கோயில் பகுதி, மலைக்கோயில், படிக்கட்டுகள், சரவண பொய்கை, தற்காலிக பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சீனிவாச பெருமாள் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

News July 27, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலையின் முக்கிய குற்றவாளி?

image

பகுஜன் சமாஜ் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான பிரதீப் நேற்று(ஜூலை 26) கைது செய்யப்பட்டார். பெரம்பூரை சேர்ந்தவர் பிரதீப். இவர் கொடுத்த துல்லியமான தகவல்களே இப்படுகொலைக்கு பெருமளவு உதவியதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ், பிரதீப்புக்கு சித்தப்பா முறை வேண்டும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

News July 27, 2024

திருத்தணி முருகன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

image

திருத்தணி முருகன் கோயிலில் நாளை தொடங்கி ஐந்து நாட்கள் ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்ப திருவிழா நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் கோயில் பகுதி, மலைக்கோயில், படிக்கட்டுகள், சரவண பொய்கை, தற்காலிக பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ் பி சீனிவாச பெருமாள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

News July 27, 2024

திருவள்ளூரில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் .

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை.26) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். தொடர்ந்து அவர் வேளாண்மை துறை மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் கத்திரி குழிதட்டு மற்றும் தென்னங்கன்றுகள் ஆகியவற்றின் கீழ் 10 விவசாயிகளுக்கு ரூ.22,260 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

News July 26, 2024

திருமழிசையில் ரூ.27 கோடி மோசடி செய்தவர் கைது

image

திருமழிசை தொழிற்பேட்டையில் உள்ள கம்பெனியில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அகமது கபீர் (56), செல்வேந்திரன், காதர் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். இதில், செல்வேந்திரன்  பங்குதாரர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார். தினேஷ்(41) என்பவர் மூலம் பங்குதாரர்களை ஏமாற்றி ரூ.27 கோடி மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தினேஷை கைது செய்தனர்.

News July 26, 2024

திருத்தணி முருகர் கோயில் நிகழ்ச்சி நிரல் அறிவிப்பு

image

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  நடைபெறவுள்ள ஆடிக்கிருத்திகை திருவிழாவின் நிகழ்ச்சி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 27.07.2024 அஸ்வினி கிருத்திகை, 28.07.2024 பரணி கிருத்திகை, 29.07.2024 ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நான் தெப்பம், 30.07.2024 இரண்டாம் நாள் தெப்பம், 31.07.2024 மூன்றாம் நாள் தெப்பம் ஆகிய நிகழ்ச்சிநிரல்கள் மேற்கூறிய தேதிகளில்
நடைபெறவுள்ளது.

error: Content is protected !!