India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, செம்பரம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆவடி மற்றும் ஜமீன் கொரட்டூர் பகுதிகளில் தலா 2.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் தற்போது கனமழை பெய்து வருகிறது. ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பழவேற்காடு, செங்குன்றம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெளியே செல்வோர், குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லுங்கள்.
தமிழகத்தில் இரவு 7 மணிக்குள் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது மணவாளநகர், ஊத்துக்கோட்டை, பூண்டி, புட்லூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, கடம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று(ஆக.04) மாலை 5.30 மணி வரை 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மாலை 5.30 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரூர், ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (53). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு போரூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இன்று (ஆகஸ்ட் 4) மதியம் போரூர் சுங்கச்சாவடி அருகே பைக்கில் ரோந்து சென்றபோது, அவ்வழியாக வந்த ரேஸ் பைக் இவர் மீது மோதியது. இதில், பைக்குடன் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ரேஸ் பைக் ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் நேற்று மாலை திடீரென காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 4 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் திருவள்ளூரில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.
பழவேற்காடு அருகே உள்ள அரங்ககுப்பம் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் – லாவண்யா தம்பதியின் 8 மாத குழந்தை சர்வேஷ், இன்று காலை வீட்டில் ரப்பர் பந்துடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, பந்து தவறுதலாக குழந்தையின் வாயில் சென்று தொண்டையில் சிக்கியது. மூச்சுத்திணறிய குழந்தையை பெற்றோர்கள் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில், குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பூந்தமல்லி அடுத்த ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலிலில், ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, நேற்றிரவு (ஆகஸ்ட் 3) கோயில் தர்மகர்த்தா பூவை ஞானம் குடும்பத்தினர், 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, பெஞ்சமின், மூர்த்தி, அப்துல் ரஹீம், சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயனவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று (ஆகஸ்ட் 4) காலை ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், ஆம்ஸ்ட்ராங் குழந்தையை கடத்தி விடுவதாகவும், குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதம் வந்ததையடுத்து, ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. உங்கள் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, கிரிக்கெட் விளையாடியது, சினிமாவிற்கு சென்றது என பல சுவாரஸ்யமாக விஷயங்களை செய்திருப்போம். சினிமாவை மிஞ்சும் அளவுக்குகூட சில சேட்டைகளை செய்திருப்போம். அந்த வகையில், உங்கள் நண்பனுடனான நினைவுகளை கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க. ‘HAPPY FRIENDSHIP DAY’
Sorry, no posts matched your criteria.