Thiruvallur

News November 26, 2024

திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

திருவள்ளூரில் நாளை (நவம்பர் 27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருவள்ளூரில் கனமழை பெய்து வரும் நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News November 26, 2024

திருவள்ளூர் ஆட்சியர் அறிவுறுத்தல்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை பெய்வதால், தூக்கி எறியப்பட்ட பழைய பாத்திரங்கள் பொருட்கள் மற்றும் பூந்தொட்டிகளில் நீர் தேங்கி டெங்கு பரப்பும் கொசுக்கள் வளர காரணமாகிவிடுகிறது. பழைய பொம்மைகள், பாட்டில்கள் போன்ற பொது வெளியில் போட்டு வைப்பதால் டெங்கு பரப்பும் சூழலை தொற்றுவித்துவிடுகிறோம். வீட்டை சுற்றிலும் தேவை இல்லாத பாத்திரங்கள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

News November 26, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 26, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை (நவ.27) புயலாக உருமாற உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் 33 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

News November 26, 2024

திருத்தணியில் காத்திருப்பு போராட்டம்

image

திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறையினர் அனைத்து பணிகளையும் புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் இன்று காலை முதல் நடத்தி வருகின்றனர். இதில் வருவாய்த்துறை பணியிடங்கள் தொடர்ந்து பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பணி இடங்களை பாதுகாத்திட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து பணியாளர்களும் பங்கேற்றனர்.

News November 26, 2024

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்டவளாகத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த. பிரபு சங்கர் அவர்கள் தலைமையில் இணை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மாநில தொடர்பு அலுவலர் வி.ஸ்ரீதர் அவர்கள் சீல் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News November 26, 2024

திருவள்ளூரில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

News November 26, 2024

திருவள்ளூரில் 510 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் மக்களிடம் இருந்து 510 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் அவர் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

News November 25, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 25, 2024

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் புயல் கூண்டு ஏற்றம்

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர, சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகங்கத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

error: Content is protected !!