India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் பாடகி இசைவாணி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட இந்து முன்னணி மற்றும் ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பு குழு சேர்ந்த ஐயப்ப பக்தர்களும், இந்து முன்னணி பொறுப்பாளர்களும் இந்த புகாரை அளித்துள்ளனர். ஐயப்பனையும், மாலை அணிந்து விரதத்தை கடைபிடித்து வரும் ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் பாடல் பாடிய இசைவாணி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை நவ.29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து விவசாயப் பெருமக்களும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற்று காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் சின்னம் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை சென்னை, உள்ளிட்ட மாவட்டக்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. இதற்காக பூந்தமல்லியில் மெட்ரோ மேம்பாலம் கட்டுமான பணிக்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூந்தமல்லி குமணன்சாவடியில் அமைக்கப்பட்ட மெட்ரோ மேம்பால தூனில் கம்பி இன்று வலைந்து சாய்ந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மெட்ரோ நிர்வாகத்தினர் கிரேன் உதவியால் வளைந்த கம்பியை சரி செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை பெய்தது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை செங்குன்றம் 81மி.மீ., ஆவடி 65 மி.மீ., சோழவரம் 60 மி.மீ., பொன்னேரி 51 மி.மீ., பூந்தமல்லி 40 மி.மீ, கும்மிடிப்பூண்டி 28 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளுர் நகராட்சி அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் வட்டாட்சியர் , ஆணையர் மற்றும் தேர்தல் வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் 296 வாக்கு சாவடி நிலைய அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் பி.எல்.ஓ மற்றும் டி.எல்.ஓ என்ற பொறுப்பில் இருக்கும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தாமோதரன் (57) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றிய வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி பெற்றோரிடம் கூறியதையடுத்து போலீசிடம் புகார் செய்தனர்.ஆர்.கே பேட்டை போலீசார் தாமோதரனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
கனமழை காரணமாக திருவள்ளூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது.இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க
திருவள்ளூரில் நாளை (நவம்பர் 27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருவள்ளூரில் கனமழை பெய்து வரும் நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.