Thiruvallur

News April 18, 2024

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

image

திருமுல்லைவாயல் அடுத்த தென்றல் நகரைச் சேர்ந்தவர் மஞ்சு, சித்தாள் வேலை செய்துவருகிறார். இவர், நேற்று திருமுல்லைவாயல் அருகேயுள்ள எழில் நகரில் உள்ள புதிய கட்டடத்தில் பணியாற்றி வந்தார். அப்போது
கட்டுமானத்திற்கான கம்பி எடுத்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக, சாலையில் உள்ள மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து, நிகழ்விடத்திலேயே மஞ்சு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 18, 2024

பசுமை வாக்குச்சாவடி: திருவள்ளூர் கலெக்டர் ஆய்வு

image

திருவள்ளூர் நகராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மக்களவைத் தேர்தல்-2024 ஐ முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 16) திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கான பசுமை வாக்குச்சாவடி மையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

News April 17, 2024

எரியில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும்

image

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டூர் ஏரியில் மணல் கோரை விடப்படுவதாகவும் அதற்குரிய பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருவள்ளூர் வி சி க முன்னாள் மாவட்ட தலைவர் கோபி நயினார் தலைமையில் பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தில் காட்டூர் ஏரியில் குடிநீர் மற்றும் விவசாயத்தை பாதுகாத்திட ஏரியில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.

News April 17, 2024

யுபிஎஸ்சி தேர்வு: திருவள்ளூருக்கு பெருமை

image

2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் திருவள்ளூரைச் சேர்ந்த புவனேஷ் ராம் என்பவர் அகில இந்திய அளவில் 41வது இடத்தையும், தமிழ்நாட்டில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். பிஎஸ்சி இயற்பியல் பட்டதாரியான இவர் 2019 யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 496வது இடத்தை பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டின் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

News April 17, 2024

இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி

image

திருவள்ளூர் நகராட்சியில் மக்களவைத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு நேற்று வாக்காளர் அனைவரும் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் கலந்துகொண்ட இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

News April 16, 2024

தேர்தல் பணிமனையில் ஆலோசனை கூட்டம்

image

திருவள்ளூர் மத்திய மாவட்டம், ஆவடி மாநகரத்திற்கு உட்பட்ட இந்தியா கூட்டணி தேர்தல் பணிமனையில் இன்று(16/04/2024) கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் அவர்கள். உடன் சண்பிரகாஷ், அதிசேகன், ராஜேந்திரன், நாராயண பிரசாத் உட்பட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

News April 16, 2024

புழல் ஏரியில் நீர் இருப்பு நிலவரம்

image

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய ஏரியாக திகழ்வது புழல் ஏரி. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நேற்றைய நிலவரப்படி நீர் இருப்பு 2808 மில்லியன் கன அடியாக உள்ளது. பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 215 கன அடி வந்து கொண்டிருக்கிறது. தற்போது தேவையான அளவில் நீர் இருப்பு உள்ளதால் இந்தாண்டு குடிநீர் பிரச்னை வராது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 16, 2024

திருவள்ளூர் அருகே நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

image

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஊராட்சியில் அதிமுக கூட்டணியில், தேமுதிக சார்பில் திருவள்ளூர் மக்களவை தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் கு நல்லதம்பியை ஆதரித்து முரசு சின்னத்திற்கு நேற்று கூட்டணி கட்சியினர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். அப்போது போண்டா சுட்டும், தேநீர் போட்டும் முரசு சின்னத்திற்கு
வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தனர்.

News April 15, 2024

திருவள்ளூர் அருகே நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

image

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஊராட்சியில் அதிமுக கூட்டணியில், தேமுதிக சார்பில் திருவள்ளூர் பாராளுமன்ற தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் கு நல்லதம்பி அவர்களை ஆதரித்து முரசு சின்னத்திற்கு இன்று பேண்ட் வாத்தியங்கள் முழங்க வீதி வீதியாக சென்று முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அப்போது போண்டா சுட்டும் தேனீர் போட்டும் முரசு சின்னத்திற்கு
வியாபாரிகளிடம்
வாக்கு சேகரித்தனர்.

News April 15, 2024

ஆவடி அருகே துப்பாக்கி முனையில் கொள்ளை

image

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான அடகு கடையில் இன்று மதியம் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் பிரகாஷை கட்டி போட்டு விட்டு, சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.