India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை லேசானது மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
ஆவடியில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கல்வித் துறை அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது.மாவட்டத்தில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சீரான பாடத்திட்டம் வகுக்க வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று (28/12/2024) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. மின்தடை செய்யப்படும் பகுதிகள்: திருவள்ளூர் நகரத்தில் உள்ள வரதராஜபுரம், தாவூத்கான் பேட்டை,ஜெ.என்.சாலை,ரயில் நிலையம், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், ஐ.ஆர்.என். பின்புறம், புங்கத்தூர், போளிவாக்கம், பட்டரை, மேல்நல்லாத்தூர், நுங்கம்பாக்கம், எஸ்.வி.புரம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவள்ளூர் பிரிவு சார்பாக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் முன்னிட்டு பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள் 04.01.2025 அன்று காலை 6 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கித்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க விரும்பபோர் மாவட்ட விளையாட்டு அரங்கித்தில் வரும் 03தேதி மாலை 6 மணிகுள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை பெய்தது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை திருத்தணி 82 மி.மீ., பள்ளிப்பட்டு 58 மி.மீ., திருவாலங்காடு 43 மி.மீ., பூந்தமல்லி 39 மி.மீ., திருவள்ளூர் 36மி.மீ., தாமரைபாக்கம் 34 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.
திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பொருளாதார மேதை மன்மோகன் சிங் மறைவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. பொருளாதார மேதை என பன்முக தன்மை கொண்டவர். 2004ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற அவர், மத கலவரம், நாட்டையே உலுக்கி இருந்த நிலையில்,அவரின் சமரசமற்ற செயல்களால் சூழலை சமநிலைக்கு கொண்டு வந்தவர்.எனது ஆழ்ந்த இரங்கலையும் புகழ் அஞ்சலியும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
கடம்பத்தூர்- திருவாலங்காடு ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை.இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.