Thenilgiris

News May 7, 2025

ஊட்டி அரசுமருத்துவமனையில் வேலை வாய்ப்பு

image

ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிகமாக 1 ஐடி கோடினேட்டா், 1எக்கோ டெக்னீஷியன் ,4 டேட்டா என்ட்ரி ஆபரேட்டா் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 21 முதல் 45.சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்ப முகவரி: முதல்வா், நிா்வாக அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இந்து நகா், உதகை 643005.(ஷேர் செய்யுங்கள்)

News May 7, 2025

நீலகிரி: தொழிலாளர் தினத்தில் மது விற்றால் புகார் அளிக்கலாம்!

image

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான சில்லறை விற்பனை கடைகள், கிளப் பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள், தொழிலாளர் தினமான இன்று அனைத்து மதுபான கடைகளும் மூடப்படுகிறது. இன்று பார்கள் ஏதேனும் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் தெரியும் பட்சத்தில் அந்த விபரத்தை 0423 -2223802, உதவி ஆணையர் 0423–2443693 ஆகியோருக்கு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

ஒரு க்ளிக் உங்க பணம் காலி: சைபர் கிரைம் எச்சரிக்கை!

image

நீலகிரி மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.(ஷேர் செய்யுங்கள்)

News May 7, 2025

விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

image

நீலகிரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டு விடுதிகளில், மாணவ, மாணவியர்கள் சேர விண்ணப்பிக்கலாம் என நீலகிரி கலெக்டர் தெரிவித்துள்ளார். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள 7, 8, 9, 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க கடைசி நாள் (மே.5) ஆகும். மேலும் தகவல்களுக்கு 9514000777.

News April 30, 2025

நீலகிரி: கார் கண்ணாடியை உடைத்து திருட்டு!

image

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பென்மெட்சா வெங்கட் அகில் வர்மா (26). இவர் பயிற்சிக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது உறவினர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். காந்தல் முக்கோணம் பகுதியில் காரை நிறுத்திச் சென்று, மீண்டும் வந்து பார்த்தபோது காரின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டு 20 பவுன் நகை, ரூ.7 லட்சம் ரொக்கம் திருடு போயுள்ளது. இதுகுறித்த ஊட்டி மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 29, 2025

நீலகிரி: முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்!

image

▶️ ஊட்டி – 0423-2223808. ▶️ கேத்தி – 0423-2517558. ▶️ மஞ்சூர் – 0423-2509223. ▶️ குன்னூர் டவுன் – 0423-2221836. ▶️ அப்பர் குன்னூர் – 0423-2221300. ▶️ கோத்தகிரி – 04266-271300. ▶️ சோலூர்மட்டம் – 04266-276230. ▶️ கூடலூர் – 04262-261249. ▶️ மசினகுடி – 04232526227. ▶️ தேவர்சோலை – 04262-222234. ▶️ தேவாலா – 04262-260316. ▶️ சேரம்பாடி – 04262-266639. ▶️ நெலக்கோட்டை – 04262-222231. இதை SHARE பண்ணுங்க.

News April 29, 2025

அமைச்சரிடம் மனு அளித்த  நீலகிரி தொகுதி மக்கள் இயக்க நிறுவனர்

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பந்தலூர் மருத்துவமனையில் போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் அன்றாடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலரும் நீலகிரி தொகுதி மக்கள் இயக்க நிறுவனர் எஸ்கேராஜ் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

News April 29, 2025

8 பேருக்கு அடுக்கு மாடி குடியிருப்பு

image

கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட அல்லஞ்சி பகுதியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் கட்டி முடிக்க பட்ட 6 அடுக்கு மாடி குடியிருப்புகளை 8 பேருக்கு ஒதுக்கி ஆணைகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் மொத்தம் 141 மனுக்கள் பெறபட்டன.

News April 29, 2025

Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

image

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளிக்க வேண்டும். நீலகிரியில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.

News April 29, 2025

வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா? போலீஸ் எச்சரிக்கை!

image

நீலகிரி மக்களே உஷார்! மோசடி கும்பல் உங்கள் வாட்ஸ்அப் OTP-ஐ கேட்டு, கணக்கை ஹேக் செய்ய முயற்சி செய்கிறார்கள். OTP-ஐ யாருடனும் பகிராதீர்கள். அவர்கள் OTP-ஐ பெற்றால், உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி சார்ந்த தகவல்களை வைத்து உங்களை மிரட்டவோ அல்லது பணத்தை திருடவோ வாய்ப்புள்ளது. உங்கள் வாட்ஸ்அப்பில் Two Step Verification-ஐ Enable செய்து பாதுகாப்பாக இருங்கள் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!