Thenilgiris

News December 5, 2024

எச்.பி.ஆரிகவுடர் 131வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 

image

நீலகிரியின் கூட்டுறவு தந்தை என்றழைக்கப்படும் ராவ்பகதூர் எச்.பி.ஆரிகவுடர் 131வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உதகை ராவ்பகதூர் ஆரிகவுடர் வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு எச்.பி.ஆரிகவுடர் நினைவு விழாக்குழு தலைவரும், படுக தேச பார்ட்டி நிறுவன தலைவருமான மஞ்சை.வி.மோகன் தலைமையில் நடைப்பெற்றது.

News December 4, 2024

நீலகிரி: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ அரசு பேருந்தை வழிமறித்த காட்டெருமை ➤ முதுமலையில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி ➤ வெலிங்டன் அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ➤ நீலகிரியில் பெய்து வரும் மழையால் பூண்டு செடிகள் பாதிப்பு ➤ நீலகிரியில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு ➤ ஊட்டி மலை ரயில் இன்று முதல் இயக்கம் ➤ கோத்தகிரியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் ➤ குன்னூரில் விபத்தில் சிக்கிய அரசு பேருந்து ➤ பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

News December 4, 2024

நீலகிரியில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதகை நகரம் மற்றும் ஊரக பகுதி, குன்னூர் நகரம் மற்றும் ஊரக பகுதி, கூடலூர் நகரம் மற்றும் ஊரக பகுதியில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் மற்றும் அவசர தேவைக்கான தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.

News December 4, 2024

குன்னூரில் விபத்தில் சிக்கிய அரசு பேருந்து 

image

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து இன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பால்மாரலீஸ் நோக்கி சென்ற அரசு பேருந்து, கரும்பாலம் தொழிற்சாலை அருகே செல்லும்போது, பேருந்தின் மெய்ன் பிளேடு அருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்கள் உடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News December 4, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் 

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து இன்று மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் பொ.சங்கர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு  முன்னிலையில், அரசுத்துறைகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

News December 4, 2024

ஊட்டியில் பிளாஸ்டிக் பயன்பாடு: நீதிபதிகள் உத்தரவு

image

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மலைவாசஸ்தலங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள், அருகிலுள்ள ஊர்களில் இருந்து தான் எடுத்து வரப்படுகின்றன. எனவே, அவற்றை தடுப்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் கூறினர்.

News December 4, 2024

‘முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது’

image

நீலகிரி மாவட்டத்தில் 4 நிவாரண முகாம்களில் 140 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும், நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை ஆகிய நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறப்பாக உள்ளதாகவும் கூறினார்.

News December 4, 2024

ஊட்டி மலை ரயில் இன்று முதல் இயக்கம்

image

தொடர் கன மழையால் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த திங்கள் முதல் நேற்று வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. தற்பொழுது நிலைமை சீராக உள்ளதால் ஊட்டி மலை ரயில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயங்க ஆரம்பித்துள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News December 4, 2024

நீலகிரியில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு

image

நிலத்தடி நீர்மட்டம் எப்படி இருக்கிறது என மாதம்தோறும் பொதுப்பணித்துறை கணக்கீடு செய்து வருகிறது. கடந்த மாதம் கணக்கிடப்பட்ட நிலத்தடி நீர்மட்டம் விவரம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீலகிரியில் மட்டும் 0.01 மீ குறைந்துள்ளது. நீலகிரியில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 1.36மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த மாதம் 1.37ஆக குறைந்துள்ளது.

News December 4, 2024

நீலகிரி காவல்துறை சார்பில் பணம் சேமிப்பு திட்டம்!

image

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் பணம் சேமிப்பு திட்ட விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மது அருந்தாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10,000, இருசக்கர வாகனத்தில்   ஹெல்மெட் அணிந்தால் ரூ.1000, 3 பேர் பயணம் செய்யாமல் இருந்தால் ரூ.1000 சேமிக்கலாம் . சீட் பெல்ட் அணிந்து இருந்தால் ரூ.1,000, வாகனத்தில் இன்சூரன்ஸ் வைத்திருந்தால் ரூ.700 முதல் 2000 வரை சேமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது. 

error: Content is protected !!