India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், “நீலகிரியில் மட்டுமே இந்த ஆண்டு டிஜிட்டல்கைது என்று கூறி மிரட்டிய விவகாரம் தொடர்பாக 28 புகார்கள் பதிவாகி ரூ. 68 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. வட மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் இந்த மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்றார்
கர்நாடக மாநிலம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: சுற்றுலா பயணியரை கவரும் வகையில் ஆர்கிட் சைக்ளோமன், ரெனன் குலஸ், உட்பட200 ரகங்களில் 5 லட்சம் மலர்கள் தயார் செய்யும் பணி நடக்கிறது. இம்மாத இறுதி வாரத்தில் குளிர்கால மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதில், கர்நாடகா மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
குன்னூரில் பூட்டிய கடை, வீடுகளை குறிவைத்து தாக்கும் கரடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் உள்ள ரேஷன் கடையின் இரும்பு ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற கரடி அங்கு இருந்த சர்க்கரை, மாவு பொருட்களை சேதப்படுத்தி உள்ளது. மேலும் பக்கத்து அறையில் பாமாயில் இருந்ததால் அது தப்பியது. உடனே வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பந்தலூர் அய்யன்கொல்லி, தட்டாம்பாறை, கோட்டைபாடி ஆகிய பகுதிகளில் யானைகள் முகாமிட்டு வீடுகளை தாக்கிச் செல்கின்றன. இந்த நிலையில் நேற்று இரவு கோட்டைபாடி கிராமத்தில் நுழைந்து, மேதி என்ற பழங்குடி பெண்ணின் வீட்டின் சுவரை தாக்கி இடித்ததால், அவர் தனது பேத்திகள் உஷா, புஷ்பா ஆகியோர் உடன் கதவை திறந்து தப்பினார். பின்னர் யானை தேயிலை எஸ்டேட் வழியே சென்றது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (11.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
1.கோத்தகிரியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
2.ஊட்டி ஏரியில் சேற்றை அகற்றும் பணி தீவிரம்
3.தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
4.ஊட்டியில் டிச.13இல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
5.குன்னூர்: ஆசிரியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா
ஊட்டி படகு இல்லம் ஏரியில் சமீபத்திய மழையில் மண் மற்றும் சேறு அடித்து வரப்பட்டு ஏரி நிரம்பி உள்ளதால் படகுகள் தரை தட்டும் நிலை ஏற்றபட்டு வருவதை தவிர்க்கும் வகையில் படகு இல்லம் நிர்வாகம் பொக்லைன் எந்திரம் மூலம் மண் மற்றும் சேறு போன்றவற்றை அகற்றும் பணியை இன்று ஆரம்பித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊட்டி சாலை ஆவின் வளாகத்தில் அமைந்துள்ள ஊட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்க கூட்டம் நாளை மறுநாள் (டிச.13) காலை 11 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை வகிக்கிறார். ஊட்டி சுற்று வட்டார மின் நுகர்வோர்கள் தங்களது மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளை நேரில் தெரிவிக்கலாம்.
குன்னூர் அருகே அரசு உதவி பெறும் நான்சச் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நான்கு மாத காலம் சம்பளம் வழங்கப்படாமல் இருந்ததை கடந்த 20ஆம் தேதி நமது way2news தளத்தில் செய்தியாக வெளியிட்டோம். ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மற்றும் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் என தெரிவித்த நிலையில், தற்போது நிலுவையில் இருந்த 4 மாத சம்பளத்தொகை இரண்டு தவணைகளாக பிரித்து ஆசிரியர்களின் வங்கி கணக்கில் போடப்பட்டுள்ளது.
முதுமலை காப்பகம் முக்கூர்த்தி தேசிய பூங்காவில், 2 வரை ஆடுகளுக்கு மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொருத்தப்பட்டு வனத்தில் விடுக்கப்பட்டது. பின்னர் வயிற்றில் 3 மாத குட்டியுடன் இருந்த ஆட்டுக்கு ஊசி போட்டதில் அது உயிரிழந்ததை அடுத்து ஊசி போடுவது நிறுத்தப்பட்டது. வன மேலிட தகவலுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.