India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி கலெக்டர் விடுத்துள்ள செய்தியில், நடப்பு மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (டிச.20) ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயம், ஐடிஐ, கணினி இயக்குபவர், ஓட்டுநர் ஆகியோர் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 0423 2444004, 72000 19666 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி அரசு மருத்துவ கல்லூரியை ஒட்டி இருந்த தடுப்புச்சுவர் கனமழையின் போது இடிந்து விழுந்தது. இதனால், ஆம்புலன்ஸ் வாகனம், நோயாளிகளை அழைத்து வரும் தனியார் வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்டன் ராணுவ பகுதிக்கு நேற்று வந்தார். அவர் அந்த பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, டீக்கடையில் டீ குடித்துவிட்டு பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (18.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
கூடலூர் சேரம்பாடி, பிதர்காடு சரக பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளையும் சேதப்படுத்தி கொண்டிருக்கும் CT16 எனும் ஒற்றை காட்டு யானையை விரட்டும் பணிக்காக இன்று கள இயக்குனர் , முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், உதவி வனப் பாதுகாவலர் தலைமையில், சேரம்பாடி, பிதர்காடு , அதி விரைவு படை ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டப்பட்டது.
1.கைவினை திட்டத்தில் ரூ. 3 இலட்சம் வரை மானிய கடன்
2.மக்கள் குறை கேட்ட தமிழக கொறடா
3.7 வீடு இடிப்பு : ட்ரோன் மூலம் கண்காணிப்பு
4.குன்னூரில் நடுரோட்டில் காட்டு எருமைகள் சண்டை
5.ரூ.3.80 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்
நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் மானிய கடன் உதவி பெறலாம். பிணையற்ற கடன் உதவி ரூ. 3 இலட்சம் வரை , ரூ.50 ஆயிரம் வரை மானியம் , 5 சதவீதம் வரை வட்டி மானியம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது .இதற்கு www msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.
குன்னூர் சட்டமன்ற தொகுதி மக்கள் தங்கள் குறைகளை எம்எல்ஏவும், தமிழக அரசின் தலைமை கொறடாவுமான ராமசந்திரனை அவரது குன்னூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் சந்தித்து குறைகளை மனுக்களாக கொடுத்தனர். அவைகளை அவர்களிடம் இருந்து பெற்று, கேட்டு அறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்து கொண்டு, 45 பயனாளிகளுக்கு ரூ.3.80 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ் கண்ணன், உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது: மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி காட்டும் மையம் கூடுதல் ஆட்சியர் வளாகம் பிங்கர் போஸ்ட் ஊட்டியில் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய தனியார் துறை நிறுவனங்கள் கொள்கின்றன என்றார்.
Sorry, no posts matched your criteria.